April 24, 2025

வாக்கோ- இந்தியா தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் தலைநகரில் 18 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் குத்து சண்டை போட்டி நடைபெற்றது.

இப் போட்டியில் இந்தியாவில் இருந்து 11 மாநில வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் 1000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குத்துச்சண்டை வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டைச் சார்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 11 தங்கம் 5 வெங்கலம் 4 வெள்ளி என இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர் வெற்றிக் கோப்பை பெற்று தமிழகம் திரும்பிய வீரர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு கிக் பாக்சிங் சங்கம் தலைவர் மு. சீனிவாசன், செயலாளர் ஹரிஹரன் தலைமையில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த செயலாளர் ஹரிகரன் அவர்கள் கூறியது தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க கூடிய வகையில் நாங்கள் முயற்சி எடுத்து கொண்டு இருக்கிறோம் எங்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்திட வேண்டும் நாங்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் விரைவில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற உள்ளோம்.

About Author