April 25, 2025

ராயபுரம் செயற்குழு உறுப்பினர் பிறந்தநாளில் நலத்திட்ட உதவிகள்!

சென்னை:

தமிழக வெற்றி கழகத்தின் வடசென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் எம்.சுரேஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வடசென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் கட்பீஸ் k. விஜயராகவன் மற்றும் மாவட்ட கழக இணை செயலாளர் B.ஜெகன் அவர்கள் 200 ஏழைகளுக்கு அன்னதானமும் 100 பெண்களுக்கு புடவையும் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் எம்.சுரேஷ் அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில்:

எங்கள் தளபதி விஜய் அவர்கள் சொல்லும் வழியில் மட்டும் செல்லுவோம். 2026 ல் எங்கள் தளபதி ஆட்சியை பிடிக்கும் போது அந்த வெற்றியை கொண்டாட காத்துக்கொண்டிருக்கிறோம். என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கழக தோழர்களும், கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

About Author