April 29, 2025

அரசுபணி நியமங்களில் ஐடிஐ தேர்வு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து தமிழ்நாடு தேர்வாணையம் அலுவலக முற்றுகை

அரசு பணி நியமங்களில் ஐடிஐ தேர்வர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து தமிழ்நாடு தேர்வாணையம் அலுவலகத்தை முற்றுகையிட முற்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழ்நாடு தேர்வாணைய இணை இயக்குநர் பிரான்சிஸ் மரிய புவியை ஐ.டி ஐ தேர்வர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தையின் ஈடுபட்டனர் . இவர்களின் கோரிக்கைகளைக்கு நிச்சயமாக தீர்வு அளிப்பதாக உறுதி கூறிய பேரில் முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐ.டி.ஐ தேர்வர்கள் ஒருங்கிணைப்பாளர் அமுதவாணன் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டு
சாலை ஆய்வாளர் பணிக்கான ஐ.டி.ஐ தேர்வர்களுக்கு மட்டுமான அரசாணை வெளியிடப்பட்டது.

பின்னர் தேர்வாணையம் வெளியிட்ட பணியிடங்களுக்கான தேர்வு போட்டியில் டிப்ளமோ மற்றும் பி.ஈ தேர்வர்களும் கலந்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது ஐடிஐ தேர்வுகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்ற கோணத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் ஐடிஐ தேர்வுக்கான சாதகமான தீர்ப்பை வழங்கினார் . மீண்டும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும் ஐடிஐ தேர்வுகளுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது . இருந்தும் தேர்வாணையம் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் ஐடிஐ தேர்வுகளுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பினை பறிக்கும் நோக்கில் டிப்ளமோ பி.ஈ தேர்வர்களுக்கு சாதகமாக செயல்படுவது ஒருதலைபட்சமானது. இது நியாயமான செயல்படும் அல்ல .ஆகவே அரசு எங்கள் கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு நல்ல தீர்வினை அளிக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

About Author