எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 94 இடங்களில் உள்ள அனைத்து பொறியாளர் கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
- சென்னை கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் பேட்டி.
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கோரி தமிழக அரசை வலியுறுத்தி சென்னை கட்டுமான பொறியாளர் சங்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தலைவர் கார்த்திக் செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர்,
கடந்த மாதம் எம் சான்ட், ஜல்லி உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
நேற்று முன்தினம் தமிழக அமைச்சரவையில் ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை விலையை குறைக்கவில்லை.
விவசாயிகளுக்கு பிறகு அதிக பணியாளர்கள் இருப்பது கட்டிட தொழில். சிமெண்ட், கம்பி விலை எல்லாம் தொடர்ந்து ஏறிக் கொண்டு உள்ளது. மக்கள் நலன் கருதி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் .
அரசு ஆயிரம் ரூபாய் குறைக்க வேண்டும் என்று சொன்ன பின் பழைய விலையில் இல்லாமல் புதிய விலையில் இருந்து குறைக்கிறார்கள். வரியை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
இதற்கு மற்றொரு வழியாக பிளாஸ்டர் செய்ய ஜிப்சம் பிளாடர் என்று உள்ளது ஈராக் போன்ற பல நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்கிறோம்.
ஜிப்சம் பிளாஸ்டரை ஏற்க வேண்டும், இதனால் கனிம வளம் பாதுகாக்கப்படும், நேரம் குறையும்.
எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 94 இடங்களில் உள்ள அனைத்து பொறியாளர் கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம்.
படித்த எங்களை சாலையில் நிற்க வேண்டாம் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
விரைவில் இன்ஜினியர்கள் கவுன்சில் கொண்டு வந்தால் இதற்கு தீர்வாக அமையும்.
ஒரு கன அடி இடத்தை கட்டி முடிக்க ஆகும் செலவு 2500 ஆக இருந்தது. 2800 முதல் 3000 வரை ஆகிவிட்டது. எம்சான்ட் ஒரு கன அடி பிப்ரவரியில் 45 மார்ச்சில் 55 இன்று 65 ரூபாய் வரை ஏற்றம் பெற்றுள்ளது.
கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய விலை நிர்ணயக் குழு அமைக்க வேண்டும்.
என்ன காரணத்திற்காக விலை ஏற்றம் என்பது அப்போது தான் தெரியும். விலை நிர்ணயக் குழு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
டாஸ்மாக்கை விட அதிக வருமானம் கிடைக்கும் இடம் குவாரிகள். அதை அரசே ஏற்று நடத்தினால் நல்ல வருவாய் கிடைக்கும்.
எந்த விலையேற்றத்தின் போதும் நாங்கள் அதை தடுக்கவில்லை அரசுக்கு வருவாய் தேவை தான் ஆனால் அதற்கு எங்களுக்கு நேரம் வழங்க வேண்டும் என்று கேட்கிறோம்.
More Stories
வேல்டுவிஷன் இந்தியா என்ற சர்வதேச கிறிஸ்துவ தொண்டு நிறுவனத்தில் 20ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்கள் பணி நீக்கம்
ஹரியந்த் நார்த் டவுன்- பெரம்பூர் குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்கம் மெழுகுவர்த்திஏந்தி அஞ்சலி
அரசுபணி நியமங்களில் ஐடிஐ தேர்வு இழைக்கப்படும் அநீதியை கண்டித்து தமிழ்நாடு தேர்வாணையம் அலுவலக முற்றுகை