சென்னை சூலை மேட்டியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சாய் அக்சரா அகடாமி என்ற பெயரில் கராத்தே பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.நான்கு வயது குழந்தைகள் முதல் இங்கு கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்கள். சமீபத்தில் மலேசியா சென்று பதக்கங்களை வென்றுள்ளனர் இது குறித்து சாய் அக்சரா அகடாமி தலைவர் ஸ்ரீ லதா அவர்கள் செய்தியாளரிடம் கூறியது இங்கு கராத்தே பயிற்சி எடுக்கும் மாணவ மாணவிகள் மாவட்ட , மாநில ,தேசிய அளவிலும் வெளிநாடுகளுக்குச் சென்றும் பதக்கங்களை வென்றுள்ளனர் எங்களுடைய ஒரே லட்சியம் இங்கு பயிற்சி பெறும் வீர வீராங்கனைகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே . எங்களுடைய லட்சியம் மேலும்
கராத்தே பயிற்சி பெற்று பல சாதனைகளை படைத்த வீர வீராங்கனைகள் தெரிவித்தாவது நான் பல போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் மலேசியா பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் சென்று பதக்கங்களை வென்றுள்ளதாக தெரிவித்தார் மேலும் எங்களுடைய மாஸ்டர் மு சீனிவாசன் அவர்கள் எங்களுக்கு என்று தனி அக்கறை எடுத்து பயிற்சி அளித்து வருகிறார் அதுமட்டுமல்ல கராத்தே பயிற்சி என்பது ஆண்கள் மட்டும் கற்றுக் கொண்டால் போதாது பெண்களும் பயிற்சி பெற்று பல சாதனைகள் படைக்க வேண்டும் தன்னை தற்காக்க கராத்தே பயிற்சி அவசியம் என கூறினார்கள் மேலும்
சாய் அகடாமி கராத்தே பயிற்சி மையத்தின் மாஸ்டர் மு சீனிவாசன் 35 வருடங்களாக கராத்தேக்காக தன்னை அர்ப்பணித்து வந்துள்ளார் தற்சமயம் இந்த அகடமி 10 வருடமாக இயங்கி வருகிறது கராத்தே பயிற்சியில் பல வீர வீராங்கனைகளை உருவாக்கி உள்ளார் சர்வதேச போட்டிகளில் இங்கு பயிற்சி பெறும் வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக தன்னை முழு நேர பயிற்சியாளராக அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் பல புது யுக்திகளை கற்றுத் தருவதில் வல்லவர். அவருடைய ஒரே நோக்கம் வருங்கால வீர வீராங்கனைகள் உச்சத்தை அடைய வேண்டும் என்பதே அவருடைய முக்கிய நோக்கமாகும்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செல்ப் டிபண்ஸ் மிக முக்கியம்சாய் அக்சரா அகடாமி தலைவர் ஸ்ரீ லதா தெரிவித்துள்ளார்

More Stories
சென்னை மாநகர மலைக்குறவன் கருவேப்பிலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைவர்கள் தேர்வு
கோடை வெயிலின் தாக்கம் கருதி அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினவிழா