கோடை வெயிலில் தாக்கம் கருதி அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் சென்னை அண்ணா நகர் தொகுதிக்குட்பட்ட கே3 காவல் நிலையம் அருகில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ ராஜேஸ்வரி பிரியா அவர்கள் தண்ணீர் பந்தலினை திறந்து வைத்தார் . அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மு ராஜேஸ்வரி பிரியா அவர்கள் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு நீர் மோர், வெள்ளரிக்காய் இளநீர் தர்பூசனை மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது . மேலும் தற்போது அரசு ஊழியர்களுக்கு அறிவித்துள்ள ஒன்பது சலுகைகள் அறிவித்துள்ளது முழுக்க முழுக்க தேர்தலை நோக்கி வெற்று அறிவிப்பு எனவும் இதுவரை நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் தற்போது அறிவித்திருப்பது வேடிக்கையானது என்றும்
நான்கு ஆண்டு சாதனை என்று சொல்லும் திராவிட மாடல் அரசு நான்கு லட்சம் கோடி கடன் வாங்கியதுதான் சாதனை தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை. ஏற்கனவே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சிதான் தற்போது நடைபெறுகிறது. இவர்களுக்கு ஊழல் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை மூத்த அமைச்சர்கள் முதல் ஊழல் பட்டியலில் உள்ளார்கள் என்றார். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் வீணா, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திகேயன், சென்னை மத்திய மாவட்ட தலைவர் சுபநந்தன், மாவட்டச் செயலாளர் பழனி குமார், மாவட்ட அவைத்தலைவர் மணிமாறன் உட்பட அண்ணா நகர் தொகுதி நிர்வாகிகள்,மகளிர் அணி சார்ந்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் கருதி அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

More Stories
சென்னை மாநகர மலைக்குறவன் கருவேப்பிலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் புதிய தலைவர்கள் தேர்வு
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செல்ப் டிபண்ஸ் மிக முக்கியம்சாய் அக்சரா அகடாமி தலைவர் ஸ்ரீ லதா தெரிவித்துள்ளார்
கோயம்பேடு வணிக வளாக அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மே 1 உழைப்பாளர் தினவிழா