May 5, 2025

தமிழால் இணைவோம் மொழி இனம் சமயம் மதங்களைக் கடந்து தமிழால் இணைவோம் கனடா டொறான்டோ தமிழ்ச் சங்கத் தலைவர்

வரும் செப்டம்பர் மாதம் 19 20 21 ஆகிய மூன்று நாட்கள் கனடாவில் உள்ள டொறாண்டோ பல்கலைகழகத்தில் உலக திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது இம்மாநாட்டை ஆசிய வியல் நிறுவனம் டொறான்டோ தமிழ்ச் சங்கம் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து நடத்துகிறது மாநாட்டின் கலந்துரையாடல் சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவன கலையரங்கில் நடைபெற்றது டாக்டர் முகிலை ராஜபாண்டியன் முன்னுரை நிகழ்த்த ஆசியவியல் நிறுவன இயக்குநர் டாக்டர் ஜி ஜான் சாமுவேல் வரவேற்புரை ஆற்ற சிறப்பு அழைப்பாளர் கனடா டொரன்டோ தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் ஆர் லம்போதரன் தலைமை உரை ஆற்றினார் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது இதுவரை ஐந்து உலக திருக்குறள் மாநாடு நடைபெற்று உள்ளது ஐந்து மாநாடுகளையும் சிறப்பாக நடத்திய டாக்டர் ஜி ஜான் சாமுவேல் அவர்கள் ஆறாவது முறை உலக திருக்குறள் மாநாட்டை வரும் செப்டம்பர் 19 , 20 , 21 ஆகிய மூன்று நாட்கள் கனடா நாட்டில் நடத்துகிறார் அவர் ஒரு வெற்றித் திருமகன் என்று பெருமையோடு கூறினார் மேலும் நாம் மதம் சமயம் இன ம் ஆகியவற்றைக் கடந்து தமிழால் உலகப் பொதுமறை திருக்குறளால் இணைவோம் என்று தெரிவித்தார் திருக்குறள் மாநாட்டில் பகல் முழுவதும் ஆய்வரங்கம் நடக்க உள்ளதாகவும் மாலை கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக தெரிவித்தார் உலக நாடுகளில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவித்தார் மேலும் நீங்களும் உங்கள் நண்பர்களும் உங்களுக்கு தெரிந்த வரலாற்றுக் கட்டுரைகளை இம்மாநாட்டுக்கு சமர்ப்பிக்கு மாறு கேட்டுக் கொண்டார் இத்தமிழ்சங்கம் அரசியலுக்கானது அல்ல தமிழுக்கானது தமிழ் மொழி பண்பாடு வரலாறு ஆகியவற்றை உலக மக்களுக்கு கொண்டு செல்வதே எங்கள் பணி என்று தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜிபி குரூப் சேர்மன் டாக்டர் வி ஜி சந்தோஷம் வாய்ஸ் ஆப் வள்ளுவர் நிறுவன தலைவர் ராஜேந்திரன் ஐ ஆர் எஸ் தலைமை கார்டியாலஜிஸ்ட் டாக்டர் வி சொக்கலிங்கம் இங்கிலாந்து லைவ் ஃபூல்ஹோப் யூனிவர்சிட்டி டேனியல் ஜெயராஜ் ஆகியோர் பங்கேற்றனர் நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் எம் இ கிருஷ்ணகுமார் நன்றி உரை ஆற்றினார்.

About Author