May 8, 2025

யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை அரசுஉடனடியாக வழங்க வேண்டும்

தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே. காசிநாத துரை அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் கூறியது. மத்திய அரசின் ஆயுஸ்மான் திட்டத்தில் தமிழகத்தில் 253பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுடைய சம்பளம் சுமார் ஒன்றரை வருடங்களாக நிலுவையில் வைத்துக்கொண்டு இதுவரை வழங்கப்படவில்லை என்றும்சங்கத்தின் சார்பில் பல கட்ட போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை . இது தொடர்பாக ஆயுஷ்மான் திட்டத்தின் தமிழக இயக்குனர் ஜெயலட்சுமி ஐ ஏ எஸ் அவர்களிடம் கேட்டதற்கு, மத்திய அரசு இந்த திட்டத்திற்கான நிதியை வழங்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக மத்திய ஆயுஷ்மான் அலுவலகத்தில் அணுகிய போது அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்கள். மேலும் இது குறித்து இயக்குனர் விஜயலட்சுமி ஐஏஎஸ் அணுகிய போது சரியான பதில் தரவில்லை. ஆகவே தமிழக முதல்வரும், துறையின் அமைச்சரும் இப்பிரச்சனை முடித்து எங்களுடைய சம்பளம் கிடைக்க உதவி செய்ய வேண்டும். இந்த சம்பளத்தை கொண்டு தான் 253 பேரும் தங்கள் குடும்பத்தையும், பிள்ளைகளின் கல்விக்கான செலவையும் பயன்படுத்தி வருகிறார்கள். யோகாவிற்கு மத்திய அரசு வழங்குகின்ற நிதியை அரசு வழங்கவில்லை என்றால் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் மேலும் இந்த ஆண்டு யோகா தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு பாடப் பிரிவினை”BNYS “என்று துணை இயக்குனர் மணவாளன் தொடங்கி உள்ளார். இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தலையிட்டு, அவருடைய கல்வி சான்றிதழ் சரிபார்த்து பதவி நீக்கம் செய்ய வேண்டும், அதேபோல் புதிதாக துவங்கி உள்ள’ BNYS’ பாடத்திட்டத்தை தமிழக அரசு நீக்க வேண்டும் என்றார்.

About Author