May 13, 2025

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் மார்க்கெட் அருகே விருதை தெற்கு பகுதி துணை செயலாளர் முபா. ரமேஷ் அவர்களின் ஏற்பாட்டில் 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தென் சென்னை தெற்கு(மேற்கு)மாவட்ட கழக செயலாளருமான வி என் ரவி அவர்கள் கலந்து கொண்டு கழக பொதுச் செயலாளர் 71வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களோடு கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது மேலும் கழக பொதுச் செயலாளரின் பிறந்தநாளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்ற வகையில் இன்று ஐநூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அந்த வகையில் இன்று விருகை தெற்கு பகுதி துணைசெயலாளர்
முபா.ரமேஷ் அவர்கள் ஏற்பாட்டில் மிகச் சிறப்பான முறையில் நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் ஏற்பாடு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் எப்போதும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே உழைக்கின்ற கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விருகை தெற்கு பகுதி கழக செயலாளர் ஏ எம் காமராஜ்,தென் சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எஸ் எம் சரவணன், 138 வது மேற்கு வட்ட கழக செயலாளர் குட்டி, 138வது கிழக்கு வட்ட கழக செயலாளர் அண்ணாமலை மற்றும் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மகளிர் அணி சார்ந்த கழகத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author