.சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிமெண்ட், எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி விலை உயர்வை கண்டித்து தமிழக முழுக்க ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… ஆர்ப்பாட்டக் குழுவினர் தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை முழங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் சென்னை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் கார்த்திக், கௌரவ தலைவர் ஆர். பாலமுருகன் கூறுகையில்
கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பொறியாளர்கள், கட்டட பொருள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், கட்டிடம் கட்டும் பொதுமக்கள் மற்றும் அரசு கட்டுமான வேலை வாய்ப்புகளை பாதிப்புக்கு உள்ளாக்கும் கட்டுமான பொருட்கள் உடைய விலையானது, திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக சிமெண்டின் விலையானது 290 இல் இருந்து 360 ரூபாய்க்கும் உயர்த்தப்பட்டு இருப்பதும் கடந்த ஒன்றரை மாதத்தில் கல்குவாரி பொருட்களினுடைய யூனிட் விலை 2500 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதும், அதேபோல எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும், ஆற்று மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும், அனைத்து கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்…
புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூடிய கனிமவளத்துறை அமைச்சரிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம் சுமுகமாக முடியாத பட்சத்தில் தமிழகம் முழுவது அடுத்த கட்டமாக மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதம் அல்லது பல்வேறு விதமான போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். ஆதரவு தெரிவித்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ், ரியல் எஸ்டேட் சங்கத் தலைவர் வி.என்.கண்ணன் பேசினர். உடன் சங்கத்தின் முன்னாள் தலைவர் மணிகண்டன் சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ் சக்கரபாணி, பொருளாளர் ஆர். ரமேஷ் குமார் உட்பட சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
More Stories
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா.
யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை அரசுஉடனடியாக வழங்க வேண்டும்
தனி நல வாரியம் வேண்டி சமையல் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை.