சென்னை சைதாப்பேட்டை கல்லூரிகள் இயக்கம் முன்பாக தலித் விடுலை இயக்கம் சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டை காவல்துறை அழைப்பின் பேரில் தலைவர் கருப்பையா அவர்கள் நேற்று கல்லூரிகள் இயக்குனர் அலுவலகம் சுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை குறித்து எடுத்துரைத்தார் . அதனை தொடர்ந்து இன்று இணை இயக்குனர் ராமன் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அரசு நிதி உதவி பெறும் அனைத்து சிறுபான்மை எஸ்சி/ எஸ்டி மக்களின் கல்வி, வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை பற்றி பேசப்பட்டது அதனை தொடர்ந்து திருச்சி பிஷப்ஹுப்பர் கல்லூரி முதல்வர், செயலாளர் மீது எஸ்சி/ எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும், திருச்சி மண்டல கல்லூரிகள் இணை இயக்குனர் டாக்டர் பொன் முத்துலிங்கம் அவர்களை பணியிட நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். அதற்கு இணை இயக்குனர் ஒரு வாரத்தில் உங்களுக்கு கடிதத்தின் மூலம் பதில் அளிப்பதாக கூறியதன் அடிப்படையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக தெரிவித்தார் மேலும் 15 நாட்களுக்குள் நல்ல முடிவு வருமொன்று எதிர்பார்க்கிறேன் அப்படி கண்டுகொள்ளாத பட்சத்தில் சைதாப்பேட்டை கல்லூரிகள் இயக்கம் முன்பாக மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் குறிப்பாக இயக்குனர் சுந்தரவல்லி ஐஏஎஸ் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தால் இந்த நிகழ்வில் தலித் கூட்டமைப்பின் தலைவர் அன்பு தாசன், லோக் ஜனசக்தி மாநிலச் செயலாளர் அம்பேத் ராஜா, தலித் கூட்டமைப்பு மண்டல செயலாளர் மதுரை சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்..
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகத்திர்வு எட்பட்ட நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

More Stories
கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுக்க ஒரு நாள் வேலை நிறுத்தம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா.
யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை அரசுஉடனடியாக வழங்க வேண்டும்