புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காட்டிய வழியில் அவருடைய கொள்கை அடிப்படையில் மக்கள் சேவை கழகம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் கட்சியின் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த கட்சியின் நிறுவனத் தலைவர் வி எம் ஜோதி ராஜ் அவர்கள் தான் சிறு வயது முதலே எம்ஜிஆர் அவர்களுடைய தீவிர ரசிகனாகவும் அவருடைய அரசியல் பயணத்தில் நான் ஒரு தொண்டனாகவும் பணியாற்றியிருக்கின்றேன் அதுமட்டுமல்ல புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்றால் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் அதற்காகத்தான் மக்கள் திலகம் என்று பெயர் அவருக்கு முடிசூட்டப்பட்டது அவருடைய வழியில் தனது கட்சி பயணத்தை துவங்கியதாகவும் தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அடுத்த இரண்டாவது தலைமுறைக்கு கொண்டு சென்ற புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் கட்சியினை இராணுவ கட்டுப்பாட்டோடு இதுவரை இந்தியா மட்டுமல்ல உலக அளவில் ஒரு கட்சி எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு உதாரணம் புரட்சித்தலைவி அம்மா ஜெ ஜெயலலிதா அவர்கள் அவருடைய செயல்பாடுகள் அனைத்து மக்களுக்கும் ஏற்றவாறு அவருடைய ஆட்சி பொறுப்பு அமைந்திருந்தது எனவே அவருடைய கொள்கை கோட்பாடு மக்களின் நம்பிக்கை கொண்ட தலைவராக பணியாற்றியவர் என்ற பெருமை இந்த நாடு அறியும் தொடர்ந்து திராவிட மாடல் அரசு என்று சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமை இந்த நாடே கொந்தளிக்கும் அளவில் செய்தி வந்தது இதில் சம்பந்தப்பட்ட ஞானசேகரன் மட்டும் கைது செய்தால் போதாது அவருக்கு துணை போனவர்களை கண்டறிந்து நீதியும் முன் நிறுத்தப்பட வேண்டும் அப்போதுதான் அரசின் மீது நம்பிக்கை வரும் எனவே தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் விசாரணைக்கு உட்பட்டு அவர்களை தண்டிக்கப்பட வேண்டும் மேலும் மக்கள் சேவை கழகத்தின் மாநாடு விரைவில் சென்னையில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்களை கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.