பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சேவை கழகத்தின் சார்பில் கட்சியின் தலைவர் பெருந்தலைவர் காமராஜர் உடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கல்விக்கண் திறந்த காமராஜர் அவர்களுடைய 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் சேவை கழகத்தின் சார்பில் தலைவர் வி எம் ஜோதிராஜ் அவர்கள் தலைமையில் தியாகராய நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் மக்கள் சேவை கழகத்தின் பொதுச் செயலாளர் பி விஜயகுமார் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மக்கள் சேவை கழகத்தின் தலைவர் வி எம் ஜோதிராஜ் அவர்கள் கூறியது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் வருங்காலங்களில் நம்முடைய தேசத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் பாடுபட வேண்டும் அது மட்டுமல்ல ஏழை பிள்ளைகள் பசியோடு பள்ளிக்கு வருவார்கள் என்று தெரிந்து மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த பெருமை பெருந்தலைவர் காமராஜர் அவர்களை சாரும் இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் இப்படிப்பட்ட எளிமையான முதலமைச்சர் தனக்கென எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்காகவும் அரும்பாடு பட்ட ஒப்பற்ற தலைவர் பெருந்தலைவர் காமராஜர் என புகையாரும் சூட்டினார் மேலும் அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் இவ்வுலகம் உள்ளவரை நினைத்து நிற்கும் என தெரிவித்தார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.