CHENNAI: சென்னை பல்கலைக் கழகத்தில் சம்பளம் குறைப்பு சம்பந்தமாக, சென்னை பல்கலைக்கழக அலுவலர்பேரவை ( பதிவு),சென்னை பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கர் SC/ST ஊழியர் நல சங்கம், சென்னை பல்கலைக்கழக நான்காம்பிரிவின் ஊழியர் நலசங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளிடம் தெரிவித்த பாலகிருஷ்ணன், மாயக்கண்ணன் கூறுகையில் சென்னை பல்கலைக்கழகத்தில்கடந்த40 ஆண்டுகளாக பணியாற்றும் அலுவலர்கள் 1989 ஆம் ஆண்டு முதல் டாக்.வேணுகோபால்குழு மற்றும் டாக் ஆறுமுகம் குழு பரிந்துரையின் படி தலைமைச்செயலகஅலுவலர் ஊதியத்திற்கு இணையாக பெற்று வருகிறோம்.இந்த ஊதியம் ஆனது நிதிக்குழு மற்றும் ஆட்சிமன்ற குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு முறையான அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு ஊதியக்குழுவின் அடிப்படையில் நிதித்துறை செயலாளர், உயர்கல்வித்துறைசெயலாளர் ஆகியோர் ஒப்புதலுடன் ஆட்சி மன்றகுழு ஒப்புதல் பெறப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறார்கள்
இந்நிலையில் 2.8.25 நடைபெற உள்ள ஆட்சி மன்ற குழுவில் சென்னை பல்கலைக்கழக ஊழியர்கள் ஊதியத்தை குறைத்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அலுவலர்களின் ஓட்டு மொத்த வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் எனவே அரசு எங்களுடைய ஊதியத்தை குறைக்க கூடாது .பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் அலுவலர்களின் ஊதியத்தை குறைப்பது சட்டத்துக்கு புறமான செயல் என்று தெரிவித்தனர்.
சென்னை பல்கலைக்கழக அலுவலர்களின் ஊதியத்தை குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கையை கைவிடவேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர் இந்த மாபெரும் உள்ளுறுப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.