March 7, 2026

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகின்றது

சிறுபான்மை இன மக்களுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகளுக்கே தேர்தலில் எங்கள் ஆதரவு இருக்கும்-தென்னிந்திய திருச்சபை பேராயர்

(சிஎஸ்ஐ) தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயத்தின் 14 ஆவத பேராயராக நேற்று பொறுப்பேற்ற அருள்திரு பால் பிரான்சிஸ் சென்னை கேத்திட்டல் சாலைகள் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்,

சென்னை பேரராயம் 25 தாய் பேராயங்களுக்கு தலைமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, 14 ஆவது பேராயராக நேற்று பொறுப்பேற்று இன்று அலுவலர்களுடன் பணியில் சேர்ந்து இருக்கிறேன்,

மூன்று லட்சம் உறுப்பினர்கள் கொண்ட எங்கள் சென்னை பேராயத்தில் கல்வி நிலையங்கள் மருத்துவமனைகள் கல்விக் கூடங்கள் கல்லூரிகள் ஆலயங்கள் இவற்றில் இருக்கக்கூடிய சவால்களை எதிர்கொள்வது தான் எங்களது மிக முக்கியமான நோக்கமாக இருக்கிறது,

ஒரு அமைப்பு அல்லது நிர்வாகம் என்றாலோ பல்வேறு கருத்துக்கள் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் தற்போது நாங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம் எப்பொழுதும் எங்கள் அலுவலக கதவுகள் திறந்தே இருக்கும் யாருக்கு எந்த நேரத்தில் எந்த பிரச்சனை குறித்தும் தெரிவிக்கலாம் கருத்துக்களையும் தெரிவிக்கலாம் அதில் இதெல்லாம் சரி செய்ய முடியுமோ அதனை நாங்கள் நிச்சயம் சரி செய்வோம்

நாட்டில் சிறுபான்மை இன மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்

சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளுக்கும் நாங்கள் குரல் கொடுக்கின்றோம். குறிப்பாக தற்போது ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ள கவின் அவர்கள் மரணத்திற்கும் லாக்கப் மரணம் அடைந்த அஜித் குமாரின் சம்பவத்திற்கும் நாங்கள் எங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம் அதுமட்டுமல்லாது தற்போது கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இருப்பதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக எங்கு எந்த நிகழ்வுகள் நடந்தாலும் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்போம்

தற்போது தமிழகத்தில் சிறுபான்மையின மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகின்றது

வருகின்ற தேர்தலில் யார் யாருடன் கூட்டணி இருப்பார்கள் என்பதெல்லாம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எதுவாக இருந்தாலும் சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிக்குதான் எங்கள் ஆதரவு இருக்கும் தேர்தல் நேரத்தில் எங்களது முடிவுகளை தெரிவிப்போம்

About Author