March 7, 2026

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பஜக தென் சென்னை மாவட்ட சார்பில் மீனவர்களுக்கு ஊக்கத்தொகை

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமோ கல்வி & தொண்டு அறக்கட்டளை மற்றும் முள்ளிக்குப்பம் மீனவர்கள், பஞ்சாயத்து பொதுமக்கள் சார்பாக
சென்னை பட்டினம்பாக்கம் சமுதாய நல கூடத்தில் மீனவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு மீனவர்களுக்கு ஊக்க தொகை வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் மற்றும் நமோ கல்வி & தொண்டு நிறுவன அறக்கட்டளை நிறுவனர் வினோத் பி செல்வம் மாநில செயலாளரும் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளருமான கரு நாகராஜன் தென் சென்னை மாவட்ட தலைவர் சஞ்சீவி தென் சென்னை மாவட்ட செயலாளர் சரவணன் மாநில மகளிர் அணி செயலாளர் பிரமலா சம்பத் தென் சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் காளிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் அவர்கள் கூறியது மீனவ மக்களுக்கு 1500 கோடி ஒதுக்கி மீனவர் நலனை பாதுகாக்கின்ற ஒரே தலைவர் நம்முடைய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அவர் மட்டுமல்ல நாட்டின் வளர்ச்சிக்காகவும் ஏழை எளிய மக்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அதேபோன்று உலக நாடுகளின் தலைசிறந்த தலைவராக நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விளங்குகிறார் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு இங்கு அனைத்து மக்களும் ஜாதி மத இனம் மொழி வேறுபாடு இன்றி சுதந்திரமாகவும் வாழ்ந்து வருவதாகவும் கூறினார் நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்று 12 ஆண்டுகளில் இந்தியா உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்

About Author