March 7, 2026

இந்து முன்னணியின் போராளி வீரத்துறவி ஐயா கோபால் ஜி அவர்களின் பிறந்தநாள் விழா.

இந்து முன்னணியின் போராளி வீரத் துறவி ஐயா கோபால் ஜி அவர்களின் 98வது பிறந்தநாள் விழா 19 9 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை சென்னை கோமளீஸ்வரன் பேட்டை பகுதியில் கோழிக்கடை கஜபதி அவர்கள் தலைமையில் கோபால் ஜி அவருடைய திருவருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் நிர்வாகிகள் சோமசுந்தரம் விஜயகுமார் பத்மநாபன் பி ஆர் சுரேஷ் அரங்கண்ணல் மார்க்கெட் பாஸ்கர் சத்யராஜ் உள்ளிட்ட இந்து முன்னணி சகோதரர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய கஜபதி உள்ளிட்ட தலைவர்கள் கூறியது வீரத்துறவி ஐயா கோபால்ஜி அவர்கள் இந்துக்களின் புனிதத்திற்காகவும் இந்து தர்மத்திற்காகவும் போராடி பல்வேறு தியாகங்களை செய்தவர் அது மட்டுமல்ல இந்திய நாட்டில் இந்திய தர்மம் மேலோங்க வேண்டும் இந்த நாடு இந்துத்துவ நாடு மிகப் பெரும் ஜனநாயகம் வாழ்ந்த நாடு இந்நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம் ஆனால் எக்காலத்திலும் இந்து தர்மத்தை அகற்ற முடியாது இந்தியா இந்து சமயம் வாழ்ந்த நாடு இந்நாட்டில் தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் யாருக்கும் ஒருபோதும் இடம் கிடையாது எங்களை ஒரு இந்தியனாகவும் இந்துவாகவும் வாழ வழிவகை சேர்ந்தவர் அனைவருக்கும் தர்மத்தையும் நியாயத்தையும் சொல்லி வழிநடத்தியவர் அந்த மாமனிதருக்கு நாம் எப்போதும் உறுதுணையாக அவர் விட்ட பணியை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என உறுதிமொழி ஏற்றனர்.

About Author