சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேதமும் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாளின் திருக்கல்யாண உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது.
மேலும் திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள தர்மராஜா கோயில் தெருவில் பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வர கலாமந்திர்,ஸ்ரீ ஜிஷ்ணு கணபதி கோயில் இணைந்து ஏற்பாடு செய்தனர்..
தொடர்ந்து பக்தர்கள் 34வது ஆண்டு பாதயாத்திரை உத்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது. மேலும் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று கணபதி ஹோமம் இருபதாம் தேதி சனிக்கிழமை அன்று ஸ்ரீ சுதர்சன மிகச் சிறப்பாக ஹோமம் நடைபெற்றது செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, கலியுகதைவம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம். நடைபெற்றது.
முதலில், ஸ்ரீதேவி பூதேவி சமேதருடன் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன, அதன் பிறகு திருக்கல்யாண உற்சவம் பிரமிக்கும் வகையில் மிக சிறப்பாக அமைந்திருந்தது.
தொடர்ந்து 22 திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது இந்த நிகழ்வில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பூஜைகள் செய்தனர்
இரவு 8 மணிக்கு திருவீதி உலா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா கோவிந்தா என சத்தத்துடன் ஒலி எழுப்பினர். இந்த காட்சியினை கண்டு களித்த பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் திருகுடைகளுடன் கூடிய கருட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர் இதில் பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கண்களால் இறைவனை தரிசனம் செய்து, ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் அருளைப் பெற்றனர்.
மேலும் செப்டம்பர் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மாலை 7:00 மணிக்கு, பக்தர்கள் முன்னிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து திருமலா திருப்பதி பக்தர்கள் பாதயாத்திரை வழி மொழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
. குருசாமி ஜி. வெங்கய்யா, பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வர கலாமந்திர், ஸ்ரீ ஜிஷ்ணு கணபதி கோயில், ஸ்ரீ ராம பஜனா குழு உறுப்பினர்கள் மற்றும் கிராமவாசிகள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். மேலும் மறைந்த செயலாளர் வி. குமாரசாமியின் ஆசியுடன் ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் ஆசியுடன் ஆட்டம் பாட்டத்துடன் மிக எழுச்சியாக நடைபெறும் என தெரிவித்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.