March 7, 2026

கரூர் விவகாரத்தில் அரசியல் தேவையில்லை அனுதாபம் மட்டும் தான் தேவை -செல்வப் பெருந்தகை#viral #kamarajar

சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் சிலையை அவரது 50ஆவது நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சொர்ணா சேதுராமன் மாவட்டத் தலைவர் சிவராஜ் சேகரன் மாநில பொது செயலாளர் அருள் பெத்தையா ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் கராத்தே செல்வம் மற்றும் 109 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மிக சிறப்பாக செய்திருந்தார் வட்ட தலைவர் அமிர்தராஜ் சையத் மோகன் பாஸ்கரன் கார்த்திக் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை பேசுகையில் , பாஜக அமைத்த உண்மை அறியும் குழுவிற்கும் தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு நபர் அதிக வித்தியாசங்கள் உள்ளது என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நீதி பரிபாலனத்தை தமிழ்நாடு மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசு நியமித்த தனிநபர் ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன் இதற்கு முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்விற்கும் ஆணைய தலைவராக இருந்தார் என கூறினார்.

தமிழ்நாடு அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம் உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்ல கூடிய ஆணையம் என்றும் பாஜக அமைத்த உண்மை அறியும் குழு என்பது கலகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட குழு என்றார். ஹேமமாலினி அனுராக் தாகூர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்த குழு பற்றியும் அனுராக் தாகூர் பற்றியும் மக்களுக்கு தெரியும் என்றார். ஹேமமாலினி வந்தவுடனே திமுக மேல் தான் குற்றம் காவலர்கள் மீதுதான் குற்றம் என கூறுகிறார் அவருக்கு கரூரில் கிழக்கு தெரியுமா மேற்கு தெரியுமா என கேள்வி எழுப்பினார். இவை அனைத்தையும் தமிழ்நாட்டு மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு முதலமைச்சர் எழுபது வயதை கடந்தவர் விடிய விடிய இந்த நிவாரம்ப பணியை செய்ய முடியுமா என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் தனது குடும்பத்தில் ஒருவர் இறந்ததைப் போல நடந்து கொண்டார் இதை அனைவரும் பாராட்ட வேண்டும் என்றார். முதலமைச்சர் செய்வது தமிழ்நாட்டு மக்கள் மீது வைத்திருக்கின்ற பற்றும் பாசமும் அரசியல் அல்ல என்றார். கரூரில் ஒருவர் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள் என்று என்னிடம் கூறினார் இவர்களை காரி துப்ப வேண்டும் என அவர் கூறியதாக செல்வப் பெருந்தகை தெரிவித்தார். மேலும் கரூர் விவகாரத்தில் அரசியல் தேவை இல்லை என்றும் அனுதாபம்தான் தேவை என்று கூறினார்.

About Author