பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு பாதிக்கப்பட்ட பதிவு மூப்பு வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு தீப்பொறி கே எஸ் செல்வராஜ் தலைமை நிலைய செயலாளர் திரு என் இளையராஜா ஆகியோர் தலைமையில் அரசின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை கே வீரன் முன்னிலை வகித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் மாநில தலைவர் தீப்பொறி கே செல்வராஜ் அவர்கள் கூறியது பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் நிரப்ப வேண்டும் மேலும் அனைத்து நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சிறப்பாசிரியர்களுக்கு எழுத்து தேர்வு முறை பொருத்தமற்றது பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் எங்களுடைய நியாயமான கோரிக்கினை தமிழக முதல்வர் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் இயக்குனர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ் சங்கர பெருமாள் டாக்டர் எம் எஸ் நாகராஜன் மற்றும் மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தின் முடிவில் திருவண்ணாமலை கே சேட்டு நன்றி உரை வழங்கினார்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.