March 7, 2026

புஷ்பா நகர்மெயின் சாலையில் மழைநீர்கால்வாய்க்காகதோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக சீர்செய்து தர வேண்டும்

சென்னை புஷ்பா நகர் மெயின் சாலையில் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக சீர் செய்து தர வேண்டும் என்று அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர்.

திராவிட மாடல் திமுக ஆட்சியில் தோண்டப்பட்டு மூடப்படாத பல்ங்களாலும் நோய் தொற்று ஏற்படுவதாக அப்பகுதி வாசிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

திராவிட மாடல் திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சீர் செய்வதாக கூறி சென்னை முழுவதும் பள்ளங்கள் தோண்டி எடுத்து அந்தப் பணிகள் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை பல்வேறு இடங்களில் நோய் பரவும் அபாயமும் மழை நீர் வடிகால்களில் கழிவு நீர் தேங்கி மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே காணப்படுகிறது
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் மெயின் சாலை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பாரில் மழை நீர் வடிகால்கள் தோண்டப்பட்டு பல நாட்களாக பணிகள் பாதியிலேயே விடப்பட்டுள்ளன.
இந்தப் பணிகளால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நோய் தொற்று ஏற்பட்டு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொது செயலாளர் திரு மஞ்சு பார்கவி அவர்கள் தொடர்ந்து புஷ்ப நகர் பகுதியில் எத்தகைய பிரச்சனை என்றாலும் அதில் முதல் குரல் கொடுக்கின்ற நபராக திரு மஞ்சு பார்கவி அவர்கள் தன்னுடைய பணியினை செய்து வருகிறார் அந்த வகையில் மழைநீர் கால்வாய் தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் அரசு அதிகாரிகள் ஆட்சியாளர்கள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் கால்வாய்களும் சேதம் அடைந்துள்ளதால் குடிநீரும் வெளியாகி அப்பகுதி வீடுகளுக்குள் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அப்பகு மக்கள் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வயிற்றுப்போக்கு மற்றும் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு இந்த பகுதியில் பெரும் பாதிப்புக்குள் ஏற்பட்டுள்ளன அதற்கு காரணம் இந்த மூடப்படாத மழைநீர் வடிகால் கால்வாய் தான் என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும் கொசுக்கரியால் அதிக அளவு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக கால்வாயை சீரமைத்து தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
அதிகாரிகளிடம் சென்று தெரிவித்தாலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

About Author