March 7, 2026

அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் ஒன்பதாவது ஆலோசனைக் கூட்டம்

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் பொதுக்கூட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி இருப்பது மனவேதனை அளிப்பதாக அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் பார்வையில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

அமைந்தகரை மக்களின் பல ஆண்டு கோரிக்கை பட்டா வழங்க வலியுறுத்தி அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் சார்பில் சங்கத்தின் தலைவர் சுதாகர் அவர்கள் தலைமையில் அப்பகுதி மக்களிடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் தலைவர் சுதாகர் அவர்கள் கூறியது அமைந்தகரை பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்கு உரிய பட்டா வழங்க வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சட்டமன்ற உறுப்பினர் எம் கே மோகன் அவர்களையும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களையும் மற்றும் முதல்வர் அவர்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது ஆனால் தமிழக அரசு இதுவரையில் பட்டா வழங்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவே தமிழக முதல்வர் அமைந்தகரை மக்களின் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள கோரிக்கினை ஏற்று பட்டா வழங்குவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் அவர்களுக்கு வேண்டுகோள் வைத்தார்.

மேலும் கரூரில் விஜய் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 41 உயிர்கள் பலியாகி இருப்பது வேதனை அளிப்பதாக சங்கத்தின் தலைவர் சுதாகர் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார் மேலும் உயிரிழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் பாதுகாப்பும் தர வேண்டும் கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு யார் காரணம் என்று அரசு தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் உண்மை நிலை பெரியவரும் அது மட்டுமல்ல மாநாடு என்றாலும் பொதுக்கூட்டம் என்றாலும் அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசின் கடமை எந்த கட்சி கூட்டம் நடத்தினாலும் மக்களை பாதுகாக்க பாதுகாப்பும் அதற்குண்டான இடத்தையும் வழங்க வேண்டும் எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வு நடைபெறக்கூடாது மேலும் இந்த 41 உயிர்களின் மரணத்திற்கு மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது அதனை நேர்மையான முறையில் உரிய விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் உண்மை நிலவரம் மக்களுக்கு தெரியும் என கூறினார்.

About Author