March 7, 2026

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் சார்பில் சீனிவாசா திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் சார்பில் 56வது ஆண்டு புரட்டாசி சனிக்கிழமை மஹா உற்சவம் சென்னை பெரம்பூர் பட்டேல் சாலையில் உள்ள ஆனந்த நிலையத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் சார்பில் ஸ்ரீனிவாசா திருக்கல்யாண வைபவம் தலைவர் தம்பி னேனி பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த சீனிவாச திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் பக்த சமாஜம் செயலாளர் எஸ் வெங்கட்ராமன் துணை செயலாளர் எச் அனந்தராமன் பொருளாளர் கோதண்டராமன் துணைப் பொருளாளர் வெங்கட ரமனுடு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் நிர்வாகத் தலைவர் ராமச்சந்திரன் பள்ளி தலைமை ஆசிரியர் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஸ்ரீ சீனிவாசா திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் திருமஞ்சனம் காசி யாத்திரை மாலை மாற்றுதல் ஊஞ்சல் சேவா குழந்தைகள் நடனம் மற்றும் திருமாங்கல்யதாரணம் சமர்ப்பணம் செய்யப்பட்டது நலங்கு மஹா தீபாரதனை சமாராதனை மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் அன்னதான சமாஜம் அரங்கத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் 04 10 2025 அன்று சனிக்கிழமை இரவு கருட சேவா வீதி உலா விமர்சையாக நடைபெற்றது மேலும் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்த சமாஜம் தலைவர் தம்பினேனி பாபு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

About Author