March 7, 2026

படிக்கின்ற மாணவர்களின் படிப்பை மேம்படுத்த நாம் உதவ வேண்டும் என்.ஜி.எம் கல்லூரி மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர்

சென்னை நுங்கம்பாக்கம் தனியார் உணவு மற்றும் தங்கும் விடுதியில் பொள்ளாச்சி என் ஜி எம் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் முதலாம் கிளை தொடங்கப்பட்டது

கர்னல் சண்முகம் வரவேற்புரை ஆற்ற கல்லூரி முதல்வர் முனைவர் ரா மாணிக்க செழியன் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் மருத்துவர் எஸ் ராமகிருஷ்ணன் முன்னிலை வகிக்க என்.ஜி .எம் கல்லூரி தலைவர் முனைவர் பி கே கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்களால் முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல் கிளை சென்னையில் தொடங்கப்பட்டது

இந்த கல்லூரியின் முன்னாள் மாணவரும் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் தலைமை அதிகாரியுமான முனைவர் எஸ் பாலச்சந்திரன் அவர்கள், சங்கத்தின் தொலைநோக்கு உரையை வழங்கினார்.

புதிய நிர்வாகப் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களுக்குச் சங்கத்தின் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

வழங்க கல்லூரியின் பல முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரி நினைவுகளை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துகொண்டனர்.

பொள்ளாச்சி என். ஜி எம் கல்லூரி 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இந்தியாவில் உள்ள கல்லூரிகளுக்களில் 100 டு 150க்குள் nirf தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது

இக்கல்லூரியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விப் பயின்று வருகின்றனர்
சந்திராயன் திட்ட இயக்குனர் முனைவர் மயில்சாமி அண்ணாதுரை , முன்னாள் தேசிய குழு உறுப்பினர் லெப்டினென்ட் ஜெனரல் லட்சுமி நரசிம்மன் முன்னாள் மகாராஷ்டிரா டிஜிபி சிவானந்தன் முன்னாள் தமிழ்நாடு ஏடிஜிபி கே நடராஜன் துணைவேந்தர்கள் சி.சுப்பிரமணியன் தா.ராஜு முன்னாள் வானிலை ஆய்வு மண்டல தலைவர் முனைவர் எஸ் பாலச்சந்திரன் போன்றவர்களும் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் பல்வேறு துறை உயர் அலுவலர்களும் இக்கல்லூரி கல்லூரியின் பெருமைக்குச் சான்றாக உள்ளனர் மேலும் உலகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பல பதவிகளிள் உள்ளனர்
இக்கல்லூரியின் தலைவர் முனைவர் பி கே கிருஷ்ணராஜ் வானவராயர் செய்தியாளரிடம் 1957-இல் இக்கல்லூரி தொடங்கப்பட்டது கல்வியின் மூலமாகத்தான் ஒரு சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்ற கனவுடன் முன்னோர்கள் இக்கல்லூரி தொடங்கினார்கள்
இன்று அக்கனவு நனவாகி கொண்டிருக்கிறது மேலும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயில உதவி செய்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

About Author