March 7, 2026

தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

தமிழ்நாடு தொழில்நுட்ப களப்பணியாளர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் உண்ணாவிரத சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைபெற்றது . மாநில தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை மண்டலத் தலைவர் ஆர் .கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநிலத்துணைத் தலைவர்கள் எம். லட்சுமணன் எஸ். நாராயணன், எல்.எழிலசன், எம் .முருகவேல், பி . சீனிவாசன் மாநிலத் துணைச்செயலாளர்கள், பி.வீரசெல்வம் , வி .நாகராஜ், கே .கோபிசந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் என 500க்கும் கலந்து கொண்டனர்.

அரசாணை எண் 223 பொதுப்பணித்துறை ( 2சி ) படி 6. 12 .2019 அன்று திருத்தியமைத்த விதிகளின்படி
தினக்கூலி பணியாளராக 10 ஆண்டுகள் வரை பணியாற்றி யவர்களுக்கு நிரந்தர பணி ஆணை வழங்க வேண்டும்.
ஆனால் 25 ஆண்டுகள் ஆகியும் நிந்தர பணியை வழங்கவில்லை.
இந்த முக்கியமான கோரிக்கையை வலியுறுத்தி பகல் – இரவு தொடர் போராட்டமாத நடைபெறும்.
கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் கோரிக்கைகள் அரசு நிறைவேறவில்லை .
எங்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு செல்லும் வரையில் போராட்டம் ஓயாது என்று தெரிவித்து கொள்கிறோம் என்றார். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் தலைவர் எஸ். குணமணி, பொதுச் செயலாளர் சுகுமார் பேசுகையில் இவர்கள் போராட்டத்திற்கு நாங்கள் உறுதுணையாக இருந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளுக்கும் செய்து தருவோம், அரசுக்கு 1438 நபர்களை பணி நிரந்தரம் செய்வது பெரிய விஷயமும் அல்ல , அதில்100க்கு அதில் மேற்பட்டோர் இறந்து உள்ளனர். மீதம் உள்ளவர்கள் உள்ளவர்கள்வாழ்வு நலம் பெற அவர்களுக்கு அரசு நல்வழி காட்ட வேண்டும் என்று கூறினார்கள்.

About Author