March 7, 2026

YMCA உடற்கல்வி கல்லூரி சார்பில் கல்லூரிகளுக்கான 2025 -2026 போட்டிகள் நடைபெற்றது

சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் ஓ எம் சி ஏ உடற் கல்லூரி சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள்2025-2026 13.10.2025 காலை 8.30மணி அளவில் தொடங்கியது.
இப்போட்டியில் கூடைப்பந்து (எம்)குத்துச்சண்டை (எம்&டபிள்யூ), கால் பந்து (எம்&டபிள்யூ), ஹாக்கி (எம்&டபிள்யூ) கோ-கோ(எம்)& நீச்சல் (எம்&டபிள்யூ) & வாட்டர் போலோ (எம்) உள்ளிட்ட போட்டிகள் 13.10.2025 முதல்15.10.2025வரைநடைபெறுகிறது.இப்போட்டியில் தமிழகம்முழுவதும் இருந்து 15கல்லூரியில் இருந்து 600 மாணவ மாணவிகள் பங்குஏற்று விளையாடு கிறார்கள்.

இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி/ உறுப்பினர் செயல்அலுவலர் திரு.
மேகநாத ரெட்டி ஐஏஎஸ் அவர்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர் தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டு துறைக்கு 160 கோடி ஒதுக்கி சுமார் 5000 விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்கி உள்ளார்கள். இதுவரையில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் விளையாட்டு துறைக்கு என்று இவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் எனவே மாணவ மாணவிகள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் அது மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என கூறினார் மேலும் வேறு மாநிலத்தில் விளையாட்டில் பங்கு பெறுகின்றவர்களுக்கு மாநில அளவில் சான்றிதழ்வழங்கு வதில்லை இது தமிழகத்தில் மட்டும் தான் நடைபெற்று வருகிறது.இந்த சான்றிதழ் அவர்களுடைய வேலை வாய்ப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அதேபோல் விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு தமிழக அரசு ஊக்க தொகை வழங்கிவருகிறது. இது அந்த மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும்மிகவும் உதவிகவும்இருந்து வருகிறது. விளையாட்டில் கவனம் செலுத்தினால் அவர்களுடைய வாழ்வில் பல்வேறு சாதனைகளை படைத்த ஏதுவாக அமையும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுச் துறை செயலாளர் டாக்டர் செல்வி, நிர்வாக அதிகாரி டி.ஜான் சுதர்சன்,உதவி பேராசிரியர்& அமைப்புச் செயலாளர் டாக்டர். ஏ.மெர்லின் தங்க டேனியல் உட்பட ஒய் எம் சி ஏ உடற்கல்வி கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

About Author