சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் அரங்கில் உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் 11 ஆம் ஆண்டு பாரதி உலா 2025 தொடக்க விழா நடைபெற்றது.
இந்த தொடக்க விழாவிற்கு பாரதி உலா பொதுச் செயலாளர் உதயம் ராம் அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் துணைத் தலைவர் சுதா சேஷய்யன், திரைப்பட இயக்குனர் எஸ்.பி. முத்துராமன்,சாய் சங்கரா மேட்ரிமோனியல்ஸ் நிறுவனர் நா.
பஞ்சாபகேசன், எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன், சாவித்திரி ஃ பவுண்டேஷன் தலைவர் ஜெ. பாலசுப்பிரமணியன், ஸ்ரீராம் சமாஜ் தலைவர் ஆடிட்டர் எஸ்.ஆர்.கே, டெக்னோ பிரொடக்ட்ஸ் மேலாண்மை இயக்குனர் முரளி சீனிவாசன், உரத்த சிந்தனை நிறுவனர் எஸ். வி.ராஜசேகர், பாரதி உலா தலைவர் பத்மினி பட்டாபிராமன் மற்றும் பாரதியின் ஆர்வலர்கள் ஆன்றோர் மற்றும் சான்றோர்கள் கலந்து கொண்டு பாரதியின் புகழ் மேலோங்க நமக்கு பின்னால் வரும் சந்ததியர்களுக்கும் அவரின் வரலாற்றினை கொண்டு செல்ல இன்னும் பல பாரதிகள் நாம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் சுதா சேஷய்யன் அவர்கள் பாரதி உலா 2025 இலச்சினை வெளியிட்டார். மேலும் ஆஸ்திரேலியாவில் பாரதிய உலா நிகழ்ச்சி வரும் ஞாயிறு தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம்தேதிவரை நடைபெற உள்ளது. அப்போது தமிழகம் முழுவதும் பாரதி உலா பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.