ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் 45 ஆம் ஆண்டு மாநில நிர்வாக குழு செயற்குழு சிறப்பு பொதுக்குழு 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் இதில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா ஸ்ரீ என் நாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்புப் பொதுக்குழுவில் திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் ஊடகவியலாளர் அரசியல் விமர்சகர் ரங்கராஜ் பாண்டே ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்கள். மேலும் இந்த நிகழ்விற்கு 1,500 க்கு மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர் சிறப்பு பொதுக்குழுவில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்யும் அதிகாரம் மாநில தலைவர் பிராமண சேவா ரத்னா ஸ்ரீ என் நாராயணன் அவர்களுக்கு வழங்கப்பட்டது மாநிலத் தலைவர் ஸ்ரீ நாராயணன் அவர்கள் எங்களுடைய சங்கமானது வருடம் தோறும் ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித்தொகை மருத்துவ உதவி தொகை திருமண உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறது 20 சதவீதம் இதர சமூகத்தை சேர்ந்த மக்களும் பயன்பட்டு வருவதாக தெரிவித்தார் மேலும் பொதுக்குழு கூட்டத்தில் கேரளாவைப் போன்று தமிழகத்திலும் முற்பட்ட சமூகங்களை சேர்ந்த நலிவடைந்தவர்களுக்கு உதவும் வகையில் தனி வாரியம் அமைக்க வேண்டும் மத்திய அரசின் சட்டமாக்கப்பட்ட பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தமிழக அரசும், இதரக் கட்சிகளும் முன்வர வேண்டும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் மாவட்டம்தோறும் திறக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு உதவ வேண்டும் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி சமஸ்கிருதம் போன்ற மொழிகளை மாணவ மாணவிகளுக்கு விருப்ப பாடமாக கற்றுக் கொடுப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் தமிழக கோவில்களை மேலும் சிறப்பாக பராமரித்து நிர்வகிக்கும் வகையில் தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைத்திட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக தெரிவித்தார் .
மேலும் மாநில அளவில் சிறப்பாக சேவையாற்றிய அனுபவம் மிக்க அவர்களுக்கு பிராமண சேவா ரத்னா விருது பிராமண சேவா விபூஷன் பிராமண சேவா பூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது மேலும் சிறப்பாக பணியாற்றிய வர்களுக்கு தனி நபர் விருதும் முனைப்புடன் செயல்பட்ட கிளை மற்றும் மாவட்ட அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
மேலும் விருதுநகர் மாவட்டத் தலைவர்
ஸ்ரீவாரி முத்து பட்டர் அவர்கள் தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.