March 7, 2026

முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் மனிதநேயர் டாக்டர் ஹண்டே அவர்களின் 99 வது பிறந்த நாள் விழா.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் மக்கள் போற்றும் மனிதநேயர் டாக்டர் ஹண்டே அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழா சென்னை பிராட்வே ராஜா அண்ணாமலை மன்றத்தில் நவீன் பைன் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ ஜெகத்குரு ஆத்மா சைதன்யானந்த் ஜீ மகாராஜ் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லயன் டாக்டர் இளைய கட்டபொம்மன் பத்திரிகையாளர் சுபாஷ் முன்னாள் காவல்துறை ஓய்வு மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பிறந்தநாள் விழாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லயன் டாக்டர் இளைய கட்டபொம்மன் அவர்கள் ஹண்டே அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மிகப்பெரிய மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து திரு சுவாமிஜி அவர்களுக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் சிறந்த சமூக செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சிறந்த சமூக சேவையாற்றிய மக்கள் செல்வர் திரு இளைய கட்டபொம்மன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய இளைய கட்டபொம்மன் அவர்கள் மதிப்புக்குரிய ஐயா ஹண்டே அவர்கள் தொடர்ந்து பொது வாழ்க்கையில் எழுபது ஆண்டு காலம் மிக சிறப்பான பணியாற்றிய பெருமை அவரை சாரும் அதே போன்று அவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதாகவும் மருத்துவ ரீதியாகவும் அமைச்சராக இருந்த போதும் பல நன்மைகள் செய்து மக்களுக்கு சேவை புரிந்தவர் என புகழாரம் சூட்டினார் அவர் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து பல நன்மைகள் செய்திட வேண்டும் என பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார் இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் சிறந்த சேவை ஆற்றிய செயல்பாட்டாளர்களுக்கு விருது வழங்கி கௌரவத்தினர்.

About Author