சென்னை எழும்பூர் ராஜ ரத்தினம் ஸ்டேடியம் அருகில் 2024 நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு நடத்திய உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் கோ பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி நா. எழிலரசி வரவேற்புரை நிகழ்த்தினார் மாநில பொருளாளர் திருமதி கே. லோகேஸ்வரி முன்னிலை வகித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் முரளிசங்கர் கருத்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் கோ.பார்த்திபன் கூறுகையில் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பணிக்கு 2013-ம் ஆண்டு முதல் தற்போது வரை நான்கு தகுதி தேர்வும், அரசாணை எண் 149ன்-படி ஒரு நியமனத் தேர்வும் எழுதி தேர்ச்சி பெற்று தகுதி உள்ள ஆசிரியர்கள் 23972 உள்ளோம். இதில் கடந்து 2025 ஜூலை 24-ம் தேதி 2457 ஆசிரியர்களுக்கு மட்டும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ல் திமுக தேர்தல் அறிக்கை எண்177-ல் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. மேலும் 2024 ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ்19260 காலிபணியிடங்கள் நிரப்ப படும் என கூறினார்.
ஆனால் 2013 முதல் 2024 வரை தொடக்கப்பள்ளியில் ஒரு காலி பணியிடமும் நிறப்பபடவில்லை. தற்போதுவரை தொடக்கப்பள்ளியில்சுமார்20000 காலி பணியிடங்கள் உள்ளது. தற்காலிக ஆசிரியர்களாக SMCமூலம் தொடக்கப்
பள்ளியில் சுமார்15000க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி13 ஆண்டுகளாக
4 தகுதி தேர்வு, ஒரு நியமனத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற தகுதி உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் மறுதேர்வு இல்லாமல் காலி பணியிடங்களை
நிரப்பிட பணி ஆணை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப் பாளர்கள் ப.வசந்தகுமார், பெ.பன்னீர் முருகன். விஜயகுமார் உட்பட1000க்கும மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர்.
உண்ணாவிரதத்தின் நிறைவாக மாநிலச் செயலாளர் திருமதி கா. விஷ்ணு பிரியா,மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி பா.சங்கீதா ஆகியோர் நன்றி உரையாற்றினார்கள் .


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.