அனைத்திந்திய கிருத்துவ சபைகளின் கூட்டமைப்பு மற்றும் ஏ ஐ சி சி சியின் சார்பில் நடத்தும் கிறிஸ்துமஸ் கேரல் பவனி பிஷப் டாக்டர் மோகன்தாஸ் அவர்கள் தலைமையில் கேரல் பவனி பேரணி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த கிறிஸ்மஸ் கேரல் பவனி நிகழ்ச்சியில் பால்வளத் துறை அமைச்சர் திரு மனோ தங்கராஜ் மற்றும் சிறுபான்மை மற்றும் வெளிநாடு தமிழ் வாழ் நலத்துறைது அமைச்சர் ஆவடி நாசர் மற்றும் ஜீசஸ் கால்ஸ் நிறுவன தலைவர் பால் தினகரன் அவர்களின் புதல்வன் சாமுவேல் பால் தினகரன் ஆகியோர் இந்த கிறிஸ்மஸ் கேரல் பவனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அப்போது பேசிய அவர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு கிறித்துவ மக்களின் நலன் பாதுகாக்க தமிழக முதல்வர் எப்போதும் கிருத்துவ மக்களுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் இந்தியாவிலேயே தமிழ்நாடு மட்டும்தான் ஜாதி மதம் பேதம் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் இந்து கிறிஸ்துவர் இஸ்லாமியர் என வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் தமிழகத்தில் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருவதாகவும் இதனை சீர்குடிக்க ஒன்றிய அரசு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகின்றனர் நம்முடைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் வளமான தமிழ்நாட்டை பொழச்சி பாதையில் கொண்டு செல்ல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு துணை நிற்பார் என தெரிவித்தனர் மீண்டும் அனைவருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
இந்த கிறிஸ்மஸ் கேரல் பவனி விழாவில் பிரண்ட்ஸ்லி மோகன்தாஸ் மற்றும் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் பேராயர்கள் கிறிஸ்து பெருமக்கள் என நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கிறித்துவ பெருமக்கள் பேராயர்கள் மற்றும் ஏ ஐ சி சி சியின் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.