March 7, 2026

அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் பொங்கல் விழா நம்ம குடும்ப விழா

பொங்கல் விழா நம்ம குடும்ப விழா அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் சார்பில் மிக எழுச்சியாக நடைபெற்றது.

அமைந்தகரை பெருமாள் கோவில் தெருவில் 09.01 2025 அன்று பொங்கல் விழா நம்ம குடும்ப விழா மிகச் சிறப்பாக அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக சங்கத்தின் தலைவர் சுதாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் போகிப் பண்டிகை சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை பொங்கல் திருநாள் தமிழர் திருநாள், உழவர் திருநாள், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் அல்லது கன்னிப் பொங்கல் என்று இப்பண்டிகை நான்கு நாட்கள் தொடர்ந்து கொண்டாடப் படுகிறது.

மேலும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது அந்த வகையில் சென்னை அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக பொங்கல் விழா நம்ம குடும்ப விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சி மற்றும் புதிய தென்றல் கலைக்குழு நடன நிகழ்ச்சி நடைபெற்றது இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நலத்திட்ட உதவி பொங்கல் தொகுப்பு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது பொங்கல் விழா நம்ம குடும்ப விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம் கே மோகன் மற்றும் அதிமுக கழக அமைப்புச் செயலாளர்,கழகச் செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் எஸ். கோகுல இந்திரா காங்கிரஸ் கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் எம்பிபிஎஸ் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியர் தலைவர் பொன் குமார் திமுக மாநில தொழில் நுட்ப அணி துணை செயலாளர் கார்த்திக் மோகன் டB.E.,M.S, தமிழ்நாடு மணல் லாரி கூட்டமைப்பு தலைவர் எஸ். யுவராஜ் கே கணேசன் வி எ பாலசுப்பிரமணியம் எஸ் பெஞ்சமின் ஆர் பூங்கொடி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். இவ்விழாவில் இப்பகுதி மக்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறோம் என்றும் எங்களுக்கு கிராம நத்தம் தான் உள்ளது பட்டா தரும்படி பலமுறை வலியுறுத்தி உள்ளோம் இதுவரை கிடைக்கவில்லை எனவே இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று அரசு உரிய பட்டா வழங்கிட வேண்டும் என தெரிவித்தனர் மேலும் அடுத்த பொங்கலுக்கு அரசு எங்களுக்கு பட்டா வழங்கும் என முழு நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதி மக்கள் சார்பாக அமைந்தகரை மக்கள் வாழ்வுரிமை பாதுகாப்பு சங்க தலைவர் V. சுதாகரன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் இப்பகுதி மக்களுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

About Author