சென்னை தியாகராய நகரில் உள்ள சர்பிட்டி தியாகராய கலை அரங்கில் பிப்ரவரி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக 10-ம் வகுப்பிற்கு மேல் பயிலும் அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் கல்வி சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது தென் சென்னை மாவட்ட தலைவர் எம். சாதிக் அலி செய்தியாளரிடம் சமுதாயம் கல்வியில் முன்னேற வேண்டும், வேலைவாய்ப்பில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தி இக்கல்வி சார்ந்த கருத்தரங்கம் நடைபெற்றது எனவும் இக்கருத்தரங்கில் நிபுணத்துவம் வாய்ந்த பேராசிரியர்கள் சமுதாயம் முன்னேற கல்வி அவசியம் என்பதையும் வேலைவாய்ப்பில் வளர்ச்சி அடைய எந்தெந்த தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கவுரை ஆற்றினார்கள் இக்கருத்தரங்கில் ஸ்கில் டெவலப்மெண்ட், சாப்ட்வேர் கில் டெவெலப்மென்ட், அரசு துறையில் அதிகாரியாவது எப்படி மற்றும் எதிர்காலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்களை மாணவர்கள் பயன்பெறும் வகையில் எடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மாணவர்கள் பங்கேற்றனர் மேலும் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இதுபோன்று பல்வேறு கருத்தரங்கம் நடத்தியுள்ளதாகவும்,இக் கருத்தரங்கம் சென்னையைச் சுற்றியுள்ள மாணவர்களுக்கு பயனடையும் வகையில் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார் மேலும் தேர்வுகளில்அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற வழிகாட்டலும் அரசு துறையில் அதிகாரியாக ஆவது எப்படி என்பது பற்றியும் எங்கு என்ன படிக்கலாம் என்பது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் சார்பாக கல்வி சார்ந்த கருத்தரங்கம்


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.