சென்னை பிரசிடென்சி கிளப்பில் லண்டனைச் சேர்ந்த Honourable Fraternity of Ancient Freemasons (ஃப்ரீ மேசன்ஸ்) (H.F.A.F.) அமைப்பின் கீழ் செயல்படும், பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பான Women Freemasons of India (WFI) இந்திய ஃப்ரீ மேசன்ரி வரலாற்றில் முக்கியமான நோக்கம், Lodge Shakthi No. 62 (சென்னை) மற்றும் Lodge Cauvery No. 63 (பெங்களூரு) ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகளிர் ஃப்ரீ மேசன்ஸ் லோஜ்ட்களின் துவக்க விழாவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிகழ்வில் லண்டனில் இருந்துTMWTGM தலைவர் சகோ.கரோல் கோலி, டெல்லி- லாட்ஜ் பாரதி எண்56 சகோ. சாதனா ராவ், சென்னை லாட்ஜ் சக்திஎண்.62 சகோ. அம்பிகா, பெங்களூரில் லாட்ஜ் காவேரி எண் 63 சகோ. ஸ்மிதா ராவ் ஆகியோர்
கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
இது தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையும் என்றும் மேலும்
இந்த சந்திப்பின் மூலம் மகளிர் ஃப்ரீ மேசன்ரியின் தத்துவம், நோக்கம், சமகால சமூகப் பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தவறான புரிதல்களுக்கு விளக்கம் வழங்கப்பட்டு மூத்த பிரதிநிதிகள் வரலாறு, தொண்டு நோக்கங்கள் மற்றும் சமூகப் பணிகள் குறித்து விளக்க உரையாற்றினர்.
அதனைதொடர்ந்து பேசிய லாட்ஜ் சக்தி எண் 62 தலைவி சகோ. அம்பிகா பேசுகையில் எங்கள் அமைப்பானது பெண்கள் வாழ்வில் முன்னேறவும், மேல்படிப்பு படித்துவிட்டு அடுத்து என்ன செய்வது என்று தவிக்கும் பெண் குழந்தைகளுக்கு எங்கள் அமைப்பின் மூலம் உதவி செய்ய தயாராக உள்ளோம் என்று கூறினார். மேலும் இந்த அமைப்பில் சேர இமெயில் தொடர்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதில் சென்னையில் உள்ள சகோ. ஆஷா மரீனா , சகோ. சைத்தாலி
சகோ.ஜி .அபர்ணா, சகோ.விஜயா பிரசாத், சகோ. லதா சுரேஷ் , சகோ. பி. தாட்சாயணி, சகோ. அருள் செல்வி
சகோ. கர்லின் சாரா, சகோ. தேவஸ்ரீ Founder Members என்று அழைக்கப்படும் உறுப்பினர்களாக உள்ளனர்
மேலும் ஃப்ரீ மேசன்ரி என்பது உலகின் பழமையான மதச்சார்பற்ற சகோதரத்துவ அமைப்புகளில் ஒன்றாகும்.
நெறிமுறை, ஒழுக்கம் மற்றும் ஆன்மிக மதிப்புகளை அடிப்படையாகக்கொண்டது. மேலும் இது மனித நேய சேவையை நோக்கமாக கொண்ட ஒரு குண நல மேம்பாட்டு நிறுவனம் ஆகும். இந்தியாவில் இது 1700களிலேயே அறிமுகமானது என்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பலர் இதில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் என்றும் இந்தியாவில் மகளிர் ஃப்ரீ
மேசன்ரி 2016ஆம் ஆண்டு தோன்றியதாகவும் திருமதி.சாதனா ராவ் அவர்கள் இந்தியாவின் முதல் மகளிர் ஃப்ரீமேசனாக உருவெடுத்தார். அவரது தலைமையிலும் 20 உறுப்பினர்களின் முயற்சியாலும் இந்தியாவில் மகளிர் ஃப்ரீ மேசன்ரி தொடங்கப்பட்டது. இந்தியாவின் முதல் மகளிர் ஃப்ரீ மேசன்ஸ் லாட்ஜ் பாரதி எண் 56 அர்ப்பணிக்கப்பட்டது. தத்துவம் மற்றும் அடிப்படை கொள்கைகள்
ஃப்ரீ மேசன்ரியில் அனைவரும் சகோதரர்கள் என்ற கொள்கையை முன்னிறுத்துகிறது. மேலும் இது அரசியல் சார்பற்றதும், மதசார்பற்றதுமான அமைப்பாகும். இங்கு கற்பனைகள், சடங்குகள் மற்றும் மதிப்புகள் சகிப்புத்தன்மை கருணை மற்றும் அன்பு சமூகப்பொறுப்பு உயர்ந்த ஒழுக்கநெறி
கடைபிடிக்க படுகிறது.
Women Freemasons of India (WFI)
இந்தியாவில் உள்ள அனைத்து மகளிர் லோட்ஜ்களுக்கும் ஒருங்கிணைப்பான அமைப்பாக WFI டெல்லியில் செயல்படுகிறது. இதன் கோட்பாடு:“Friendship, Inspiration, Empowerment”.
உறுப்பினர் அமைப்பு
18 வயதுக்கு மேற்பட்ட எந்தமதம், சாதி, இனவேறுபாடும் இல்லாமல் பெண்கள் உறுப்பினராகலாம்.
தொடர்புக்கு Email : lodge.shakthi@gmail.com கை
தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தனர்.


More Stories
பல்லாவரத்தில் அதிமுகவினர் இடையே கோஷ்டி மோததால் பரப்பரப்பு.
JVS ARUMUGAM Submits Expression of Interest to Contest from Nellithope Constituency
மக்களின் சிரமங்களை தென்னக ரயில்வே துறை பொருட் படுத்தவில்லை- எஸ் ஆர் எம் யூ பொதுச் செயலாளர் கண்ணையா தெரிவித்துள்ளார்.