சர்வதேச அளவில் உருவெடுத்து வரும் You.Fo விளையாட்டின் அறிமுக அமர்வை சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் கல்லூரியில் இந்தியாவில் இவ்விளையாட்டை அறிமுகப்படுத்திய முதல் கல்வி நிறுவனமாக SKPC திகழ்கிறது.
ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரியில் காலை 9.00 மணிக்கு SKPC மைதானத்தில் நடைபெற்ற இந்த அமர்வில் மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய முதல்வர் டாக்டர் என். வனஜா மற்றும் டின் டாக்டர் பி. பி. வனீதா அவர்கள் தங்களது வருகையாலும் செயற்பாட்டு பங்களிப்பாலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.
மேலும் மாணவிகள் சர்வதேச விளையாட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று அவர்கள் ஊக்குவித்து, பெண்களுக்கான புதுமையான விளையாட்டுகளை முன்னெடுத்து வரும் கல்லூரியின் முயற்சியை பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியை You.Fo தூதர் மற்றும் இந்திய முன்னணி ஒருங்கிணைப்பாளர் சிரில் வெரோனிஸ் தலைமையேற்று நடத்தினார். விளையாட்டின் விதிமுறைகள், நுட்பங்கள் மற்றும் சர்வதேச வாய்ப்புகள் குறித்து கல்லூரி மாணவிகளை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அறிமுகப் படுத்தினார். வரவிருக்கும் You.Fo உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அமைப்பு குறித்து விளக்கமளித்து, மாணவிகள் உலகளாவிய பிரதிநிதித்துவத்தை இலக்காகக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தவர்கள்:
ஷபூ தோமஸ் – இந்திய அணி
மனிஷா – இந்திய அணி
ஹரிஷ் – You.Fo மீடியா குழு
ரூபன் – You.Fo மீடியா குழு
அவர்கள் நேரடி விளக்கக் காட்சிகளையும் செயன்முறை பயிற்சிகளையும் வழங்கி, மாணவிகள் விளையாட்டை நேரடியாக அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுத்தினர். கலந்து கொண்டவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் செயல்பட்டு, You.Fo விளையாட்டிற்குத் தேவையான திறன்களை விரைவாக கற்றுக்கொண்டனர். இது கல்லூரியில் இவ்விளையாட்டின் வளர்ச்சிக்கான சிறந்த வாய்ப்பை வெளிப்படுத்துகிறது.
நிகழ்ச்சி உரையாடல்கள் மற்றும் மாணவர் பங்கேற்புடன் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இது SKPC கல்லூரிக்குப் பெருமை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. கல்வியைத் தாண்டி பெண்களை சர்வதேச விளையாட்டு வாய்ப்புகள் மூலம் அவர்களின் திறமைகளை, முழுமையான வளர்ச்சியை மேம்படுத்தும் கல்லூரியின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி மீண்டும் ஒரு சவாலாக அமையும் என தெரிவித்தனர்.


More Stories
SRMIST Launches AI-Powered Talent Acquisition Agent with Prayag.ai
Aligned with NEP and Atmanirbhar Bharat, KCG College of Technology Unveils AICTE
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 350 மாணவர்கள் ஐ.டி. மற்றும் சைபர் பாதுகாப்பு டிப்ளோமாவில் பட்டம் பெற்றனர்