January 22, 2025

கொரோனா பாதிப்பிற்கு பிறகு பாலியல் பிரச்சனைகள் அதிகரிப்பு டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் தகவல்

கொரோனா பாதிப்பிற்கு பிறகு உலகம் முழுவதிலுமே பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என டாக்டர்கள் டி.காமராஜ். ஜெயராணி காமராஜ் கூறினர்.

உலக பாலியல் தினத்தையொட்டி சென்னை வடபழனியில் உள்ள டாக்டர் காமராஜ் மருத்துவமனையில் பாலியல் விழிப்புணர்வு பிரச்சார மனிதசங்கிலி, கையெழுத்து நடைபெறுகிறது. இயக்க துவக்க விழா ஆகியவை

இதுகுறித்து உலக பாலியல் சங்க பாலியல் உரிமை குழு உறுப்பினர் டாக்டர் டி.காமராஜ். மீடியா செயலாளருமான கூறியதாவது: கமிட்டி தலைவரும், அசோசியேட் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜ் ஆகியோர்

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்துவருவது வேதனை அளிக்கிறது. பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அனைவருக்குமே மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோர்களுக்கும் தேவைப்படுகிறது. இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை நாங்கள் கடந்த 28 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம்.

பாலியல் விஷயங்களையும், பாலியல் உணர்வுகளையும் மூடி மூடி வைப்பதால் அனாகரிகமாக வெறித்தனத்தோடு வெளிப்பட்டு பாலியல் வன்முறையாக உருவெடுக்கிறது. இந்த சமூக கொடுமையிலிருந்து மீள முறையான பாலியல் கல்வி தேவைப்படுகிறது. அதற்காகத்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கேரள உயர்நீதிமன்றம், பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க

இதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். இதே போல் தமிழகத்தில் பள்ளிக்கூட பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளனர். இவர்களுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு அவசியம். அதற்கு பாலியல் கல்வி அவசியம். எனவே, தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளில் இதனை பாடமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல் சமூகத்தில் நிலவும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக பெற்றோர்களை எப்படி தயார்படுத்த வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஏனென்றால், குழந்தைகளுக்கு தெரிந்த நபரோ, அல்லது தெரியாத நபரோ தொடக்கூடாத இடங்களில் தொடுவதை எதிர்ப்பு தெரிவிக்கவும், இதனை பெற்றோரிடம் உடனே தெரிவிக்கவும் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறி வருகிறோம்.

குழந்தைகள் மீதான வன்முறை நிகழ்வதற்கு பல காரணிகள் உள்ளன. பெண் குழந்தைகள் மட்டுமன்றி ஆண் குழந்தைகளும் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர். முதலில் இந்த குற்ற ஈடுபடுகிறவர்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் செயலில் பல்வேறு நடவடிக்கைகளை மறைமுகமாக செய்வர். உதாரணத்திற்கு குழந்தைகள் விரும்பும் பொருட்களை கொடுத்து தன்வசப்படுத்துவர். பிறகு தனது விருப்பம் நிறைவேறியதும் இந்த குற்ற செயல்குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டுவர்.

இவர்களில் பலர் வெளியிலிருந்து வரும் நபர்களாக இருக்காது. வீட்டில் அல்லது மிக அருகாமையில் உள்ள நபர்களாகவே இருக்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தை சரியாக படிக்காமலும், தனது பணிகளை சரியாக செய்யாமலும், உணவு மற்றும் தூக்கம் ஆகிய விஷயத்தில் குறைவாக அல்லது அதிகமாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகள் இருந்தால் உடனே பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனித்து, அவர்களிடம் விசாரித்து உண்மையை தெரிந்துகொள்வது நல்லது.

எல்லாவற்றிற்கும் அடிப்படை தேவை பாலியல் விழிப்புணர்வு தான். தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழ்க்கைத்துணையின் தேவையை நிறைவேற்ற வேண்டும். யாரும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. ஒருவருக்கு ஒருவர்

விட்டுக்கொடுத்து மகிழ்ச்சியாக இருக்கும்.வாழ்வார்களேயானால்

அவர்களது வாழ்க்கை

எந்த ஆண் மகனும் என்றென்றைக்கும் இளமையாகத்தான் இருக்க ஆசைப்படுவான். ஆண்மைக்கு அழகும் இளமைதான். அந்த இளமைக்கு ஆப்பு வைப்பது எது தெரியுமா? விரும்பி குடிக்கும் மது தான். ஆனந்தமும் கம்பீரமும்

தனியாகவோ, நண்பர்களுடனோ குறைந்த அளவில் மது அருந்தினால், அது உடல் உறவுக்கான உற்சாகமான மனநிலையை தரலாம். அந்த நேரத்தில் மனம் முழுவதும் பரவசம் பரவும். கூடுதல் உற்சாகம் கிடைக்கும்.

மது அளவுக்கு மீறினால், தொடர்ந்து குடித்து வந்தால் உடல் உறவுக்கான மனநிலையை பாதிக்கும். தாம்பத்திய உறவின் மீதான ஆசையை, வேட்கையை, ஏக்கத்தை அடியோடு குழி தோண்டி புதைத்து விடும்.

அதிகமாக மது அருந்தும் போது உடலில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படுகின்றன. போதையின் பாதையில் தொடர்ந்து பயணித்தால் ஆ ஆண்மைக் குறைவு ஏற்படும். விரைப்பையில் சுரக்கும் டெஸ்டோ ஸ்டீரான் ஹார்மோன் அளவு குறைந்து விடும். எதற்கு இந்த வீண் வம்பு. மகிழ்ச்சியாக இருக்கத்தான் குடிக்கிறார்கள். வாழ்க்கையில் அளவில்லாத ஆனந்தத்தை தரும் தாம்பத்திய உறவை அழிக்கும் மதுவுக்கு அடிமையாகாமல் இருப்பதே நல்லது. மது மட்டுமன்றி போதை வஸ்துகள் அனைத்துமே உடலுக்கு ஆபத்தானவை தான் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனா தாக்குதலால் உலக நாடுகள் அனைத்திலும் பாலியல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும். நம்மை நாம்

இவ்வாறு டாக்டர்கள் டி.காமராஜ், ஜெயராணி காமராஜ் ஆகியோர் கூறினர்.

About Author