.சென்னை, செப்டம்பர் , 2026
ஸ்ரீ இராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று நடைபெற்ற 41வது நிறுவனர் மற்றும் பல்கலைக்கழக தின விழாவில் சிறந்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும், நெடுநாள் பணியாற்றிய பணியாளர்களுக்கும் தங்க பதக்கங்களும், விருதுகளும் வழங்கப்பட்டன.
S. எம்.பி.பி.எஸ் படிப்பில் சிறப்பாக தேறிய செல்வி. அபிநயாவுக்கு நான்கு தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 28 மாணவர்களுக்கு 38 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி தலைவர் மற்றும் பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியருமான Dr. K. பாலாஜி சிங் மற்றும் கதிரியக்கவியல் துறை பேராசிரியர் Dr. J.D. ராய் சந்தோஷம் ஆகியோரின் சிறந்த சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது. முடநீக்கியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சைத் துறையின் பேராசிரியரான Dr. கண்ணன் கார்த்திக் கைலாஷிற்கு சிறந்த மாணவர் வழிகாட்டி விருதும் வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருதுகள், வழிகாட்டுதல் சிறப்பு விருதுகள், சிறந்த சேவை விருதுகள், தொழில் நுட்ப சிறப்பு சேவை விருதுகள், கற்பித்தல் சிறப்பு விருதுகள், புகழ்பெற்ற முன்னாள் மாணவர் விருதுகள், 40, 30, 25, 20, 10 ஆண்டுகள் சேவை புரிந்தமைக்கான விருதுகள், சிறந்த விளையாட்டு வீரர் விருது, சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் புத்தக அங்கீகாரம் விருது. சிறந்த NCC விருது, சிறந்த NSS விருது, மாணவர்களுக்கான தங்கப்பதக்கம் மற்றும் ரொக்க விருதும் வழங்கப்பட்டன. நீண்ட காலம் பணியாற்றிய 282 பேருக்கு பணியாளர்களுக்கு தங்க பதக்கங்கள் மற்றும் ரொக்க பரிசும் வழங்கப்பட்டன.
வேந்தர் திரு. V.R. வெங்கடாசலம், இணைவேந்தர் திரு. R.V. செங்குட்டுவன் மற்றும் அறங்காவலர், ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை திருமதி. சம்யுக்தா வெங்கடாசலம் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், ஆய்வாளர்கள், விளையாட்டு வீரர்கள், தேசிய சேவை திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் தங்க பதக்கங்களையும் விருதுகளையும் வழங்கினர். விழாவில் வேந்தர் திரு. V.R. வெங்கடாசலம் ‘சஹாயா’ எனப்படும் ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமையத்தின் நோயாளிகளின் வீட்டு பராமரிப்பு சிகிச்சைத் துறையை தொடங்கி வைத்தார். நோயாளிசார் சேவையை மையமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த துறை நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்ற பிறகும் தங்கள் மருத்துவ பராமரிப்பை தொடர உறுதுணையாக இருக்கும். இதில் மருத்துவ ஆலோசனைகள், செவிலியர், தீவிர சிகிச்சைப் பிரிவு, இயன்முறை சிகிச்சை, முதியோர் பராமரிப்பு, உளவியல் ஆலோசனை, பேச்சு பயிற்சி, ஆய்வக ரத்தப்பரிசோதனை மற்றும் பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், மருந்து விநியோகம் போன்ற பலதரப்பட்ட சுகாதார சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கும்.
ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் உட்புற பராமரிப்புத்துறை மூத்த மேலாளர் திரு. P.K. கிஷோர் நிறுவன வேந்தர் தெய்வத்திரு. N.P.V. ராமசாமி உடையார் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினார். துணைவேந்தர் Dr. உமாசேகர் வரவேற்புரையாற்றினார்.


More Stories
First-of-its-kind initiative in India to enable early detection of retinal damage and help prevent vision loss
Rela Hospital and Smile Train Launch India’s Largest and Most Comprehensive Cleft Care Reference Centre
Kauvery Hospital Alwarpet Introduces Endoscopic Spinal Fusion in Chennai, Expanding Minimally Invasive Options for Disc Disease, Nerve Compression and Revision Spine Surgery