November 19, 2026

தமிழ்நாட்டில் FESTON ESS நிறுவனத்தின் பிரம்மாண்ட BESS உற்பத்தி ஆலை திறப்பு விழா!

தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார சேமிப்புத் துறையில் புதிய மைல்கல்லாக, FESTA Group நிறுவனத்தின் FESTON ESS – பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு (BESS) உற்பத்தி ஆலையின் திறப்பு விழா ஸ்ரீபெரும்புதூர் – சென்னை தொழிற்பேட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன், நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீராம் மற்றும் இணைத் தலைவர் சம்பத்குமார் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்தப் புதிய உற்பத்தி ஆலை ஆண்டுக்கு 3 GWh BESS உற்பத்தித் திறனைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மின்சக்தி மற்றும் எரிசக்தி சேமிப்புத் துறையில் FESTA Group தனது உற்பத்தி மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்துகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை திறம்பட சேமித்து பயன்படுத்துவதற்கான நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், இந்தியாவின் எரிசக்தித் துறை முன்னேற்றத்திற்கும் இந்தப் புதிய ஆலை முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியில் மற்றுமொரு புதிய மைல்கல் – FESTON ESS!

About Author