
CHENNAI: புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் தியாகராய நகர் பகுதி அசோக் நகர் 28- வது தெருவில் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகள், எடப்பாடியாரின் தீவிர பக்தன், கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் டாக்டர் சுனில்.வி அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தி.நகர் கழக மேற்கு பகுதி இணைச்செயலாளர் கே.தேன்மொழி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். இந்த நிகழ்ச்சியில் தி.நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் மு.உதயா எம்.ஏ. கழக நிர்வாகிகள் பி.பத்மநாபன், கார்டன் வி.சுரேஷ்குமார், கராத்தே எஸ்.சேகர், காலனி சி.பிரபாகரன், எஸ். சுரேஷ்குமார், அலமேலு, உஷா, மற்றும் கழக தொண்டர்களும் ஏராளமான பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
More Stories
IRIS Events Presents 12th Edition of Chennai Super Mom 2025 by Mom Junction
பேச்சுவார்த்தையின் அடிப்படையில் சுமுகத்திர்வு எட்பட்ட நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப் விலை உயர்வை கண்டித்து தமிழக முழுக்க ஒரு நாள் வேலை நிறுத்தம்