January 15, 2025

ஆசிரியர்களா மாணவர்களா என்ற வேறுபாடுகளை மறந்து நடனமாடி பொங்கல் கொண்டாடம்

சென்னை அடுத்த புழுதிவாக்கத்தில் ஆசிரியர்களா மாணவர்களா என்ற வேறுபாடுகளை மறந்து நடனமாடி பொங்கல் கொண்டாடிய தனியார் பள்ளி ஆசிரியைர்கள்

இவ்விழாவில் மாணவ, மாணவிகள் , பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாரம்பரிய விழாவை கண்டு களித்தனர்.

பொங்கல் திருநாளை கண்முன்னே பிரதிபலிக்கும் வகையில் அலங்கார மேடையிட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, இருபுறமும் இனிப்பான கரும்பு அலங்கரிக்க , புத்தாடை தைத்துடுத்தி, சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர் . ‘ கோலாட்டம் ,பரையாட்டம்,பொய்கால்கட்டை, பொய்கால் குதிரை ஆட்டம், நாட்டுப் புறப்பாடல்கள், திரையிசைப்பாடல்கள் என பள்ளி மைதானமே களைகட்டியது.

ஆசிரியர்களா? மாணவர்களா? என்ற வேறுபாடுகளை மறந்து நடனமாடி அன்றைய பொழுதை களியாட்டங்களில் கழித்தனர் . நகர இயந்திர மயமான வாழ்க்கை அன்று ஒருநாள் மட்டும் கிராமிய பாரம்பரியத்துடன் இணைத்துக் கொண்டது. எங்கு காணினும் கிராமத்து கிளிகளாய் மாணவர்களின் ஒப்பனை.
ஆசிரியைகள் என்ன அதற்கு சளைத்தவர்களா என்ன?
இதில் பள்ளியின் தலைவர், துணைத்தலைவர் பிரகாசவல்லி ஆகியோரின் ஒத்திசைவோடு நடைபெற்ற இப்பொங்கல் விழா இனிதான அனுபவம்

About Author