திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
அந்தப் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று சமத்துவ பொங்கல் மகிழ்ந்தனர்
உலக பொதுமறையான திருக்குறளை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்றும் அதனால் இந்த பொங்கலை திருவள்ளுவர் பொங்கலாக எங்க பகுதியில் கொண்டாடுகிறோம் என காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் தெரிவித்துள்ளார்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின் இரண்டாம் நாள் ஆன இன்று மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமாக தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு 109 வார்டிற்கு உட்பட்ட கில் நகர் பார்க் அருகே திருமதி மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் அவர்கள் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஏ எம் கணேஷ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் அருள் பெத்தையா, ஆயிரம் விளக்கு பகுதி தலைவர் கராத்தே செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து சிறுவர் சிறுமிகளுக்கான ஓட்டப்பந்தயம், பெரியவர்களுக்கு ஓட்டப்பந்தயம் உரியடி மற்றும் பேச்சுப்போட்டி கவிதைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. குறிப்பாக அந்த வார்டுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்ற கோல போட்டியில் முதலிடம் இரண்டாம் மற்றும் முண்றாம் இடம் பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கினார்கள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமதி சுகன்யா செல்வம்,
109 வது வார்டு மக்களிற்காக தமிழர்களின் பாரம்பரியம் கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில் கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடுவது போல இங்கே அனைவரும் பொங்கல் வைப்பதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்
சிறு சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் கிராம பரம்பரையும் இப்படியான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது
” உலக பொதுமறையான திருக்குறளை மக்கள் அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உள்ளது என்றும் இந்த பொங்கலைப் பொறுத்த வரைக்கும் திருவள்ளுவர் பொங்கலாக நாங்கள் இதை முன்னெடுத்து வருகிறோம். 1330 திருக்குறளையும் சரியாக சொல்லும் சிறுவர்களுக்கு 15000 ரூபாய் சிறப்பு பரிசும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறும் சிறப்பு மிகுந்த நிகழ்வும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 300மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.
More Stories
వైభవంగా ఆర్యవైశ్య అన్నదాన సభ 15వ వార్షికోత్సవ వేడుకలు
తెలుగు వెలుగు తరపున సంక్రాంతి కానుకలు అందజేసిన అల్లింగం రాజశేఖర్
ఆంధ్ర కళా స్రవంతి ఆధ్వర్యంలో అంగరంగ వైభవంగా సంక్రాంతి వేడుకలు