தமிழகம் முழுவதும் கனிமவளத்துறையின் கீழ் இயங்கும் மலை குவாரிகள் மற்றும் கிரஷர்கள் என அனைத்திலும் நடைபெறும் முறைகேடுகள், ஊழல்கள், லஞ்சம் லாவணியம் குறித்து பலமுறை கனிமவளத்துறை அதிகாரிகள் மற்றும் கனிமவளத்துறை ( நீர்வளத்துறை ) அமைச்சர் என மனு வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த அரசு அமைந்து 3 அரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லாத பட்சத்தில், முதல்வர் அவர்களின் கவன ஈர்க்கும் பொருட்டு இரண்டு ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் என நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை, இதன் காரணத்தினால் கனிமவளத்துறையில் நடைபெறும் ஊழல் மற்றும் கடந்த வாரம் புதுக்கோட்டையில் நடைபெற்ற சமூக ஆர்வலர் படுகொலை குறித்து ஊடகங்களின் வாயிலாக தமிழ்நாட்டு மக்களுக்கு அம்பலபடுத்திட வேண்டும் என்பது குறித்து,
தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தவைவர் யுவராஜ் சென்னை பத்தரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
தமிழகத்தில் மலையை குடைத்து எடுக்கும் பணிகளில் பல்வேறு முறைகேடு நடைபெற்று வருகிறது. நீ்ர்வளத்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என முதல்வர் வரை கடிதம் கொடுத்து விட்டோம்.
மலைகளில் உடைத்து எடுக்கும் பணிகளில் தமிழகத்தில் கையில் எழுதப்படும் பில்கள் தான் கொடுக்கப்பட்டு வருகிறது. குவாரி உரிமையாளர்கள் அதிகாரிகள் சீல்களை அவர்களே இந்த பில்களில் போட்டு விடுகிறார்கள். E Way பில் வேண்டும், கம்பியூட்டர் பில் வேண்டும் என கேட்கிறோம் என கூறினார். 2021 ஜீன் மாதம் பிறகு குவாரிகள் எதும் புதுப்பிக்கவில்லை எனவும் மலையை ஒடைக்க வெடி மருத்து அரசு தான் தருகிறது எனவும் தமிழகத்தில் 5 ஆயிரம் கிரஷர்கள் அனுமதி இல்லாமல் இயங்குகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 296 கிரஷர் உள்ளது. ஆனால் வெறும் 20 கிரஷர் மட்டும் தான் அனுமதித்தனர்.
நாங்கள் புகார் மனு அளிக்கும் போது ஆணையர் மாற்றப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 மலை குவாரிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்து நாள் ஒன்றுக்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கர்நாடக மாநிலம் எடுத்து செல்லப்படுகிறது என தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ வாரி ஸ்டோன் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குவாரியில் ஒரு மணி நேரத்திற்கு 500 டன் அரைக்கும் இயந்திரங்கள் உள்ளது.
அங்கே உள்ள அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை. கனிம வள அதிகாரிகளை கேட்டால் சுற்றுச்சூழல் அதிகாரிகளை கேட்க சொல்கிறோர்கள் மாவட்ட ஆட்சியரை கேட்டால் கனிம வளத்தை காட்டுகிறார்கள் என தெரிவித்தார்.
குவாரிகளுக்கு எந்த விதிமுறையும் அரசு கொண்டு வர வில்லை என தெரிவித்தார். ஆனால் குவாரிகளில் கனிம வளங்களை எடுத்தும் செல்லும் லாரி ஓட்டுநர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
அரசு ஏன் இதை முறைப்படுத்த வில்லை,
தமிழக கனிம வளங்கள் பிற மாநிலங்களலான கர்நாடக, கேரளா இடத்திற்கும் பிற நாடுகளுக்கு எடுத்து செல்கிறார்கள் என கூறினார். இதை தடுக்க யாரும் இல்லை என கூறினார்.
இதை தடுக்க லோக் ஆயுத்தா குழுவை 10 மாவட்டங்களில் அமைக்க வேண்டும்.
White M sand இப்போதும் எங்கேயும் கிடைக்க வில்லை, அதற்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் தான் குவாரி இயக்கியது. அரசே ஏன் குவாரியை ஏற்று நடந்த கூடாது எனவும் ஒரு மாவட்டத்தில் நடைபெற கூடிய கனிம கொள்ளையை அரசு தடுக்க முடிய வில்லை என தெரிவித்தார்
More Stories
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135வது பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் மிகை எழுச்சியாக கொண்டாடப்பட்டது
Monica Singhal’s magical session “CURE IS SURE” in Chennai
பங்குனி திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.