February 28, 2025

சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பட ஜெய் பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொது நல சங்கம் சார்பில் கடன் உதவி

சென்னை கோயம்பேடு அங்காடி சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜெய் பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தின் தலைவர் வா செல்வகுமார் ஏற்பாட்டில் சிறு வியாபாரிகளுக்கு இரண்டு தவணையாக அரசு மானியத்துடன் கடனுதவி சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த சங்கத்தின் தலைவர் வா. செல்வகுமார் அவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சிறு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் அதிக வட்டிக்கு பணம் வாங்கி திருப்பி கட்ட முடியாத சுயல் ஏற்பட்டுள்ளது இதனால் சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது ஆகவே ஜெய் பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொது நல சங்கத்தின் சார்பில் அரசு உதவியுடன் தாட்கோ நிறுவனத்திடம் அரசின் மூலம் குறைந்த வட்டிக்கு மானியத்துடன் இரண்டு தவணையாக கடன் உதவி சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பல சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அப்படி இருந்தும் சிறு வியாபாரிகளின் நலனில் எந்த ஒரு அக்கறையும் காட்டவில்லை என்றும் அவர் படுகின்ற வேதனைகளையும் குடும்ப சூழ்நிலைகளையும் உணர்ந்து ஜெய் பீம் உழைப்பாளர் மற்றும் சிறு வியாபாரிகள் பொதுநல சங்கத்தின் சார்பில் அடுத்த கட்டமாக ஆயிரம் நபர்களுக்கு கடன் உதவி பெற்றுத் தரப்படும் என தெரிவித்தார் .

About Author