March 1, 2025

அகில இந்திய விடுதி உரிமையாளர்கள் நல சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அகில இந்திய விடுதி உரிமையாளர்கள் நல சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் 27.2.2025 மற்றும் 28.2.2025 ஆகிய இரண்டு நாட்கள் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து விடுதி உரிமையாளர்களின் நலச் சங்கங்கத்தினர் கலந்துகொண்டனர். இதில் அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைத்து ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிபுரியும் பணியாளர்கள், மகளிர், ஆடவர் மற்றும் மாணவ மாணவியர் தங்கும் விடுதிகள் இருக்கின்றன என தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் லயன் சீதாராமன் அவர்கள், இந்தியா முழுவதும் உள்ள 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் தங்கி, உறைவிடம் உணவு போன்றவற்றை அளித்து மிக சிறப்பான பணியை செய்து கொண்டிருக்கின்ற, விடுதி உரிமையாளர்களின் நலனை, மத்திய மாநில அரசுகள் கருத்தில் கொள்ள வேண்டும், ஐடி நிறுவனங்களையும் நம்பி ஆரம்பிக்கப்பட்ட இந்த சர்வீஸ் ஆனது என்றும், வொர்க் ப்ரம் ஹோம் என்பதால் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை அனைத்து மாநில விடுதி உரிமையாளர்களும் மிகப் பெரிய வருத்தமாக இந்த கூட்டத்தில் பதிவு செய்தார்கள்.

மத்திய மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு வொர்க் ப்ரம் ஹோம் என்ற நிலையை மாற்றி, work from ஆபீஸ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நிலையினால் இந்தியாவின் பொருளாதாரமே பாதிக்கக்கூடிய மிகப்பெரிய அபாயம் உள்ளது.

இதனால் மக்களின் பொருளாதாரம் தடை படும் நிலை உள்ளது. டீக்கடைகளில் இருந்து, ஆட்டோ ஓட்டுனர்களிலிருந்து, வியாபாரங்களிலிருந்து, அனைத்து வியாபாரங்களும் வொர்க் ஃப்ரம் ஹோம் என்பதால் மிகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க உள்ள நிலையில், மத்திய மாநில அரசுகள் ஐடி நிறுவனங்களிடமிருந்து இந்த முறையை நீக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சங்க தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

About Author