March 3, 2025

தமிழகத்தின் முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்தநாளில் அமைதிப் பேரவையின் நிறுவனர் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் இனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாளில் அமைதிப் பேரவையின் நிறுவனர் பூ செ செ நித்தியானந்தம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.

தமிழகத்தின் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான திரு மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு அமைதிப் பேரவையின் நிறுவனர் நித்தியானந்தம் அவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் ஆரோக்கியத்துடன் இன்னும் பல்லாண்டு வாழ்ந்து தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் பணியாற்றிட வேண்டுமென மனநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டார் தொடர்ந்து செய்தியாளரிடம் கூறிய நித்தியானந்தம் அவர்கள் ஏழை எளிய மக்களின் நலன் கருதியும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தன் உயிரையும் கொடுக்க தயங்க மாட்டேன் என அவர் கூறியிருப்பது தமிழக மக்கள் அனைவரும் நெகிழ்ந்து போய் உள்ளனர் மேலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதியினை மத்திய அரசு தவிர்த்து வருவது ஏற்புடையதல்ல மாணவர்களின் கல்வி எதிர்காலத்துக்கு மத்திய அரசு ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது பாரதப் பிரதமர் அவர்கள் இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களும் சமமாக சமத்துவமாக பார்க்கபார்க்க வேண்டும் மத்திய கல்வித் துறை அமைச்சர் அவர்கள் மும்மொழி கொள்கினை இந்தி மொழி அனுமதிக்கப்பட்டால் மட்டும்தான் கல்விக்கான நிதியை ஒதுக்க முடியும் என கூறியிருப்பது மிகக் கண்டறிந்த கூறியதாகும் ஆனால் தமிழ்நாட்டின் பள்ளி குழந்தைகள் மத்திய அரசு நிதி தராவிட்டாலும் மாணவர்களாகிய நாங்கள் நிதி பெற்றுத் தருவோம் என கடலூர் மாவட்டத்தில் பள்ளி குழந்தை ஒருவர் பத்தாயிரம் ரூபாய் முதலமைச்சரிடம் நேரில் கொடுத்து இருப்பது தமிழ்நாட்டிற்கு பெருமைக்குரியது அதேபோன்று அமைதிப் பேரவை நிறுவனர் நித்தியானந்தம் அவர்கள் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மொழியிக்கும் எப்போதும் நாங்கள் உறுதுணையாக நிற்போம் அதன் அடிப்படையில் தங்களுக்க எந்த கஷ்டங்கள் இருந்தாலும் பரவாயில்லை பள்ளி குழந்தைகள் முன்வந்து நிதி கொடுக்கும்போது தன்னால் முடிந்த சிறிய தொகையினை ரூபாய் 5002 முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளதாகவும் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நம்முடைய தாய்மொழியான தமிழ் மொழியை வளர்க்க முதல்வர் கூறியது மத்திய அரசு 5,000 கோடி கொடுத்தாலும் சரி பத்தாயிரம் கோடி கொடுத்தால் சரி தான் ஒருபோதும் தமிழ் மொழியினை விட்டுக்கொடுக்க மாட்டேன் அதே நேரத்தில் இந்தியை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்திருப்பது தமிழக முதல்வர் நமக்கு கிடைத்திருப்பது பெருமை மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்டு எண்ணிக்கையை குறைக்கக்கூடிய வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவது ஏற்புடையதல்ல முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் எந்த மாநிலமாக இருந்தாலும் அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக எந்த மொழியும் திணிக்க கூடாது அவரவருடைய விருப்பம் என அன்றே பாராளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது ஆகவே பாரத பிரதமர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை கூடுதலாக ஆக்க வேண்டுமே தவிர பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க முன்வரக்கூடாது என கூறினார் மீண்டும் தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வில் அமைதிப் பேரவையின் பொதுச் செயலாளர் காசிராஜன் நண்பர் ஜோஸ்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author