March 6, 2025

வானகரம் T.S.சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் பட்டமளிப்பு விழா

வானகரம் T.S.சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 22.02.2025
அன்று கடந்த வருடம், தொழில் நுட்பப் படிப்பை முடித்துச் சென்ற 73 மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழாவானது மிக சிறப்பாக நடைபெற்றது.
அந்தக் கல்லூரியில் நடைபெறும் 16 வது பட்டமளிப்பு விழா என்பது குறிப்பிடத்தக்கது.

திருமதி D.சபிதா – IAS கூடுதல் தலைமைச்செயலர் (ஓய்வு) அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் திருமதி அருணா சங்கரநாராயணன் அவர்கள் மற்றும் TVS கல்வி குழுமத்தின் இயக்குனர் டாக்டர் மாலினி சீனிவாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

வானகரத்தில் 1997-ல் திரு.T.S.சீனிவாசன் அவர்கள் நினைவாகத் துவங்கப்பட்ட இப்பயிற்சிக் கல்லூரி 2006-ம் வருடம் தொழில்நுட்பக் கல்லூரியாக உருவெடுத்தது. தமிழக அரசின் தொழில் நுட்பக்கல்வி இயக்குனரகம் மற்றும் AICTE – Newdelhiன் அங்கீகாரம் பெற்றது.

T.S.சீனிவாசன் தொழில்நுட்பக் கல்லூரியான இந்நிறுவனம் T.V.S கல்வியியல் சமூகத்தின் ஒரு அங்கமாகும். சுந்தரம் கிளேட்டன், லூகாஸ் TVS, TVS மோட்டார்ஸ், வீல்ஸ் இந்தியா, TVS எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சுந்தரம் பாஸ்ட்னர்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்கள் இத்தொழில் நுட்பக் கல்லூரியின் ஆதரவு நிறுவனங்களாகும்.

இங்கு நடத்தப்படும் பட்டயப்படிப்புகள் DME (Mechanical Engineering), DMT (Mechatronics), DRA (Robotics & Automation Engineerinmg), and DCIoT (Computer Engineering) ஆகும்.

இக்கல்லூரியில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, படிப்பு மற்றும் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் மாணாக்கர்களின் படிப்பு மேம்பாட்டிற்கு உதவிடும் வகையில் T.S.சீனிவாசன் அவர்கள் நினைவாகவும் மற்றும் மாணாக்கர்களின் சிறந்த புராஜக்ட் படைப்பிற்காக P.J. தாமஸ் அவர்கள் நினைவாக உதவித்தொகையும், இறுதி ஆண்டு முடித்த மாணாக்கர்களில் ஒவ்வொரு துறையிலும் மிகச்சிறந்த ஒருவருக்கு ரூ50,000/- வீதம் விருதும் வழங்கப்பட்டது.

இக்கல்லூரியில் படித்து முடிக்கும் மாணாக்கர்களுக்கு வேலை வாய்ப்பை மேம்படுத்தும் வகையில் 40 மிகப்பெரிய தொழிற்சாலைகளில் MOU மூலம் 100% வேலை கிடைப்பதை உறுதி படுத்தப்படுகிறது.

இது தவிர, சிங்கப்பூர், துபாய் மற்றும் ஜெர்மனி நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் கடந்த மூன்று வருடங்களாக மாணாக்கர்கள் தொழிற் பயிற்சி கிடைக்கப் பெற்று வேலை செய்து வருகிறார்கள்.

இவ்வருடம், குறிப்பாக தொழில் தொடங்குவதை மாணாக்கர்களிடையே ஊக்குவிக்கும் வகையில் உலகளவில் ஆன்லைனில் பயிற்சியில் கலந்து கொண்டு பல போட்டிகளில் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து பல பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

About Author