தமிழக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை மற்றும் மகளிர் அணி மாநில தலைவர் திருமதி உமாரதி ராஜன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி
மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக உலக மகளிர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்
உலக மகளிர் தின விழாவை ஒட்டி நடைபெற்ற மகளிர்க்காண விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து மகளிர்களுக்கும் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது…. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறுவர்களுக்கான பேச்சுப்போட்டி/ நடனப் போட்டி நடைபெற்றது. மனிதர்கள் செய்ய வேண்டும் இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பாஜக மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் திருமதி நதியா சீனிவாசன் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரன் மற்றும் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணை தலைவர் திருமதி மஞ்சு பார்கவி/மாவட்ட மகளிர் அணி மாவட்ட தலைவர் திருமதி ஆஷா ராணி/விவசாய அணி மாநில தலைவர் திரு ராஜா அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு மேடையில் பேசி அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கி மகளிர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் இந்திய குடியரசுத் தலைவர் ஒரு பெண் மத்திய நிதியமைச்சர் ஒரு பெண் டெல்லி தலைநகர் முதலமைச்சராக இருக்க கூடியவர் ஒரு பெண் இது போன்ற பெண்கள் சமுதாய முன்னேற்றத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு மேலாக நம்முடைய பாரதப் பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி அவர்கள் மிகச் சிறப்பாக செயலாற்றி வருவதாக கூறினார்கள்
இந்த நிகழ்ச்சியில் செந்தாமரை, காவியத்தாமரை, மகிழ்மதி, ஆகிய மகளிர் குழுக்களின் குழு தலைவர்கள் உறுப்பினர்கள்/மத்திய சென்னை கிழக்கு மாவட்ட/மண்டல /வட்ட/கிளை/ நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்…. இவ்விழாவை ஒருங்கிணைத்த மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி ராஜா மற்றும் மகளிர் அணி மண்டல் தலைவர் திருமதி ஸ்ரீவித்யா ஆகியோருக்கு தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் சமகல்வி திட்டத்தையும் மும் மொழிக் கொள்கையும் வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ராஜா அன்பழகன்/ கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் விமல் நாதன்/ மூத்த கார்ய கர்த்தர் பர்வ லோகு /118 வது வட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் வழி நடத்தினார்கள். நிகழ்ச்சி நிறைவாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகளிர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு திருமதி மஞ்சு பார்கவி அவர்கள் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது.என தெரிவித்தனர்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாஜக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது


More Stories
Camerry Icecream Turns World Ice Cream Day into a Celebration of Gratitude, Honouring Chennai Police
Over 7,000 Runners Participate in the 15th Edition of the Hexaware Dream Runners Half Marathon 2026
Broadcast Media Cinema Expo (BMCE) 2026 Commences in Chennai