மக்கள் பயன்படுகின்ற வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்திய அஞ்சல் துறை நடத்தும் சிறப்பு ஆதார் முகம் 109ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் திருமதி சுகன்யா செல்வம் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பினை தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கத்தின் தலைவர் பி சுரேஷ் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி சுரேஷ் அவர்கள் கூறியது மக்கள் நல இயக்கம் என்ற பெயரில் நாங்கள் மக்களுக்கான சேவைகளை பணியாற்றி வருவதாகவும் இந்த இயக்கமானது 2018ல் துவங்கப்பட்டது அப்போது கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு
தேடி சென்று உணவு வழங்கியது இந்த இயக்கம் அதுமட்டுமல்லாமல் சாலை ஓரம் உள்ள மக்களுக்கு உணவு வழங்குதல் இலவச டியூஷன் சென்டர் நடத்துதல் மேலும் மாதந்தோறும் இன்டோர் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களை ஊக்கி வைக்கும் வகையில் பரிசு மற்றும் சான்று வழங்குதல் இது போன்ற எண்ணற்ற பணிகள் மேற்கொண்டு மாணவர்களுக்கு உதவிக்கரம் செய்வதில் தமிழ்நாடு வாழ் அனைத்து மக்கள் நல இயக்கம் எப்போதும் அனைத்து மக்களுக்கும் பேரு உதவியாக நிற்கும் என தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் திரு எழில் ராஜன் மற்றும் இயக்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


More Stories
‘Drug Free Tamil Nadu 1000 people participated in the Grand human chain rally.
శోభా రాజా నివాసంలో వైభవంగా వరలక్ష్మీ పూజలు
கோவையை அதிர விடும் போதைப்பொருள் மன்னன்… ஆளும் கட்சி ஆதரவில் அட்டூழியமா? – யார் இந்த அரவிந்த்?