May 5, 2025

கோடை வெயிலின் தாக்கம் கருதி பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

கோடை வெயிலின் தாக்கம் கருதி விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட தசரதபுரத்தில் பாஜக ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் டி பி எஸ் செந்தில்குமார் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற தண்ணீர் பந்தல் திறப்பினை பாரதிய ஜனதா கட்சியின் தமிழக முன்னாள் தலைவரும், ஆந்திரா- பாண்டிச்சேரி முன்னாள் கவர்னர்மான டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு நீர்மோர் இளநீர், தர்பூசணி, கிர்ணி பழம், வெள்ளரிக்காய் மற்றும் பழ வகைகள் வழங்கப்பட்டன மேலும் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் கோடை காலங்களில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர்மோர், இளநீர் பழ வகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி மக்கள் நலனில் முழு அர்ப்பணிப்பு செயல்பட்டு வருவதாகவும் கூறினார்,தமிழக அரசு நீட் தேர்வு முறையில் கபட நாடகம் நடத்தி வருவதாகவும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் செய்வது ஏற்க முடியாத ஒன்று நீட் தேர்வினால் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருவதாகவும் கூலித் தொழில் செய்கின்ற ஒரு தொழிலாளியின் மகள்,மகன் இன்று டாக்டர் படிக்கின்றேன் வாய்ப்பு கிடைக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நீட் தேர்வு ஆகும். ஆகையால் தமிழக அரசு அரசியல் செய்வது விட்டு விட்டு மாணவர்கள் எதிர்காலத்திற்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவரும், சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளருமான கரு.நாகராஜன் தென் சென்னை மாவட்ட தலைவர் சஞ்சீவி, முன்னாள் மாவட்ட தலைவர் காளிதாஸ் உட்பட பாஜக நிர்வாகிகள் மற்றும் இதர பிரிவு நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

About Author