சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளரை சந்தித்த தமிழ்நாடு சமையல் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் நிறுவனத் தலைவர் கலைமாமணி C.V.ராமேஸ்வர சர்மா, மாநிலத் தலைவர் குன்றத்தூர் ராஜா (எ)K.ராஜேந்திரன், மாநில பொதுச் செயலாளர் B.சுரேஷ், மாநில பொருளாளர் சென்பகாம்பிகா S.ரவி ஆகியோர் இணைந்து செய்தியாளரை சந்தித்தனர் அப்போது கூறிய அவர்கள் கூறியதாவது:- பேரிடர் காலங்களிலும் மற்ற அரசு நிகழ்ச்சிகள் என எத்தகைய சூழ்நிலையிலும் சமையல் கலைஞர்கள் மட்டும்தான் மக்களுக்கு உணவு தயார் செய்து பேர் உதவி செய்து வருகின்றனர் ஆனால் எங்களுடைய வாழ்வாதாரம் இன்னும் மாறவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் கணக்கெடுத்தால் குறைந்தது 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இருக்கின்றோம் எங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு எங்களுடைய முக்கிய கோரிக்கையே சமையல் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் . இதில் 8 தீர்மானங்களை அரசிடம் வேண்டுகோளாக வைக்கிறோம் . பேரிடர் காலங்களில் தங்கள் குடும்பத்தை விட்டு பல்வேறு கடினங்களுக்குப் பிறகும், எங்களுடைய குடும்பங்களை வழிநடத்தி செல்வதாகவும் இவையெல்லாம் தமிழக அரசு புரிந்து கொண்டு தமிழக முதல்வர் உங்களுடைய வேண்டுகோளை ஏற்று எங்களது நியாமான வாழ்வாதா கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் மேலும் சமையல் கலைஞர்களுக்கு அரசு 2 சென்ட் நிலம் வழங்கிட வேண்டும். 50 வயதிற்கு மேல் உள்ள சமையல் கலைஞர்களுக்கு ஓய்வூதியும் வழங்கிட வேண்டும், எங்களது பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட வேண்டும். பணியின் போது உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை பத்திரிகையாளர் மத்தியில் முன்வைத்தனர் .செய்தியாளர் சந்திப்பில் தலைமை முதன்மைச் செயலாளர் ரா. மாணிக்கம் துணைத் தலைவர் அக்னி கே வெங்கடேசன் துணைச் செயலாளர் தமிம் பாட்ஷா இணை செயலாளர் சிவகுமார் ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு நவீன செயலாளர் சாருமதி மாநில இளைஞர் அணி மீத்தின் ஸ்ரீ ஹரி அலுவலக செயலாளர் சஞ்சய் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
தனி நல வாரியம் வேண்டி சமையல் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை.

More Stories
யோகா பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை அரசுஉடனடியாக வழங்க வேண்டும்
தமிழால் இணைவோம் மொழி இனம் சமயம் மதங்களைக் கடந்து தமிழால் இணைவோம் கனடா டொறான்டோ தமிழ்ச் சங்கத் தலைவர்
கோடை வெயிலின் தாக்கம் கருதி பாஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு